இந்திய ரூபாய் மதிப்பு திங்களன்று அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து 86 என்ற அளவை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வலுவான நிலையில் வெளியானதைத் தொடர்ந்து டாலர் மதிப்பில் தடாலடியாக உயர்ந்து ரூபாய் மதிப்பு மளமளவென வீழ்ச்சி அடைந்துள்ளது.இதன் காரணமாக, அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் குறைப்புகளின் அளவும், எண்ணிக்கையும் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 85.96 ரூபாயாக இருந்து, ஆனால் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே 86.2050 ரூபாய் அளவில் இருந்தது. இதற்கிடையில் தற்போது 86.41 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கையில் எதிர்பாராத வகையில், ஜூன் மாதத்தில் 160,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 256,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதேபோல் வேலைவாய்ப்பின்மை 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது முதலீட்டு சந்தையை கடுமையாக பாதித்து, அமெரிக்க டாலரை வலுப்படுத்தியது.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை தரவுகள் வலுவானதாக இருப்பதால், அமெரிக்க ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு குறைவான வட்டி குறைப்புகளையே அறிவிக்கும் என்று சந்தை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு தான் இன்றைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ரூபாயின் இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக பணவீக்கத்தை பாதித்து இறக்குமதி செலவுகளை அதிகரிக்கும். இதை தொடர்ந்து ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ஆர்பிஐ விரைவான நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்பிஐ தனது அடுத்த நாணய கொள்கையைப் பிப்ரவரி 5-7 ஆம் தேதி திட்டமிட்டு உள்ளது, இக்கூட்டத்தில் ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது மட்டும் அல்லாமல் ரெப்போ விகிதம் குறைப்பது குறித்தும் அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது
இந்த நாணய கொள்கை கூட்டம் கொஞ்சம் ஸ்பெஷல், இக்கூட்டம் புதிதாக நியமிக்கப்பட்ட ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டம் தான் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் கட்டாயம் மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்.
More From GoodReturns

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு.. 100-ஐ தாண்டுமா.. இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவால்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications