மும்பை: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 67 பைசா முன்னேறி 72 ரூபாயாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதே ஆகும். அது போக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கமும் அதன் பங்கை ஆற்றுகின்றன.
வணிகர்களின் கருத்து படி ஏற்றுமதியாளர்களின் டாலர் விற்பனை மற்றும் வங்கிகள் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான பணவீக்கம் ஆகியவையும் ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பங்குச்சந்தை உயர்வும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கியப் பங்காக உள்ளது..
பிரென்ட் கச்சா எண்ணெய் ஒருவருட சரிவு அதாவது 7% குறைந்து இப்போது ஒரு பேரல் 67 டாலருக்கு விற்பனையாகிறது. இந்தச் சரிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம். அவர் ஒப்பேக் (OPEC) நாடுகள் மற்றும் சவுதி அரேபியாவை எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த கூறியதன் விளைவு தான் இன்று கச்சா எண்ணெய் சரிய தொடங்கியுள்ளது.
நேற்றைய தினம் ரூ.72.67 நிறைவடைந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை 72.18 ஆக வர்த்தகத்தைத் தொடங்கிப் பிறகு 67 பைசா முன்னேறி 72 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications