அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.71ஆக சரிவு..!
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றி மற்றும் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டு அளவுகள் சுமார் 5 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வு குறித்த முடிவுகள் மிகவும் சாதகமாக உள்ள நிலையில் ஆசிய, ஐரோப்பிய சந்தையில் இருந்த முதலீடுகள் கூடப் பெரும் அளவு அமெரிக்கச் சந்தையை நோக்கிய சென்று வருகிறது.

இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலிமை இழந்து வருகிறது.
திங்கட்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா சரிந்து 68.71 ரூபாயாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications