அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உய்ரவு..!!
திங்கட்கிழமை வட கொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாலும், அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த வெளியாகும் தரவுகள் ஆகியவை அமெரிக்காவின் டாலர் மதிப்பை அதிகளவில் பாதித்துள்ளது.
மேலும் ஜப்பான் நாணயத்திற்கு எதிரான டாலர் மதிப்பு 0.1 சதவீதம் வரை சரிந்துள்ளது.

இந்நிலையில் இந்திய சந்தையில்குறைவான பணவீக்கம், 100 சதவீத பருவமழை, வட்டி குறைப்பு ஆகியவை ஆசிய சந்தையில் முதலீட்டுக்குச் சிறப்பான சூழ்நிலை இந்தியாவிற்கு உருவாகியது.
இதன் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.11 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications