Budget 2023: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல்வேறு கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த பட்ஜெட்டின் எதிரொலி பங்கு சந்தையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு நேர பட்ஜெட் ஆகும். ஆக இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். இது குறிப்பாக மக்களுக்கு பலன் அளிக்கும் விதமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு துறைக்கு முக்கியத்துவம்
மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணிப்பில், உள்கட்டமைப்பு துறைக்கு வரவிருக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம். வேலை வாய்ப்பினை அதிகரிக்க முற்படலாம். உள்கட்டமைப்பு துறையானது அரசின் திறனையும் காட்டும். இது வளர்ச்சியினையும் ஊக்குவிக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்பினையும் ஊக்குவிக்க முடியும். மொத்தத்தில் பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
வங்கித் துறைக்கு முக்கியத்துவம்
இதற்கிடையில் வங்கித் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாலர் மதிப்பானது வலுவிழந்து காணப்படும் நிலையில், பெரிய பெரிய கார்ப்பரேட்கள் வெளி நாட்டுக் கடன் வாங்குவது என்பது குறைந்துள்ளது. இதன் காரணமாக அவைகள் இந்திய வங்கிகளை நாடலாம். ஆக இந்திய வங்கிகளின் வளர்ச்சியானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கி பங்குகள்
ஆக வங்கி பங்குகள் மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் வங்கி பங்குகளை விட, பொதுத்துறை வங்கி பங்குகள் விலையானது அதிகரிக்கலாம். ஆக பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த 5 வங்கி பங்குகளை வாங்கி போடலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் நிபுணர் கணித்துள்ளார்.
என்னென்ன வங்கிகள்?
5 பொதுத்துறை வங்கிகளில்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
கனரா வங்கி
பாங்க் ஆப் பரோடா
பஞ்சாப் நேஷனல் வங்கி
சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் அடங்கும்.
வங்கிகளுக்கு ஆதரவு
வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசு வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக உள்கட்டமைப்பு துறையினை ஊக்குவிக்கலாம். உள்கட்டமைப்பு சார்ந்த இந்திய நிறுவனங்கள் இந்திய வங்கியினை நாடலாம். ஆக இந்திய வங்கிகள் பங்கு விலையானது அதிகரிக்கலாம். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது இந்திய வங்கிகளுக்கு ஆதரவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வங்கிகள் ஏற்றம் காணலாம்
ஆக வரவிருக்கும் பட்ஜெட்டினால் அறிவிக்கப்படும் திட்டங்களினால் பொதுத்துறை வங்கிகள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாப் லாஸ் எவ்வளவு?
இதற்கிடையில் எஸ்பிஐ வங்கிக்கு ஸ்டாப் லாஸ் ஆக 555 ரூபாயும், இதே கனரா வங்கிக்கு 295 ரூபாய் ஸ்டாப் லாஸ் ஆகவும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஸ்டாப் லாஸ் 53 ரூபாயாகவும், பாங்க் ஆப் பரோடாவின் ஸ்டாப் லாஸ் 165 ரூபாயாகவும், சிட்டி யூனியன் வங்கியின் ஸ்டாப் லாஸ் 150 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications