ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான SBI ஊழியர்கள்..!! இது தான் கூரையை பிச்சுகிட்டு கொட்டுறதோ?

பாரத் ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமாக செயல்படும் SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஐபிஓ வெளியிட்டு அதன் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடங்கின. இந்தியாவில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஐபிஓ இது. இந்த ஐபிஓ வெளியீடு எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. பல ஊழியர்களும் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதிகளாகியுள்ளனர்.

ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான SBI ஊழியர்கள்..!! இது தான் கூரையை பிச்சுகிட்டு கொட்டுறதோ?

இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 574 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 7% கூடுதல் விலையில் பங்குகள் விற்பனைக்கு வந்தன. பிஎஸ்இ-யில் 610 ரூபாய்க்கும், என்எஸ்இ-யில் 613.30 ரூபாய்க்கும் பங்குகள் வர்த்தகம் செய்ய தொடங்கின.

இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு உரிமை திட்டத்தின் கீழ் பங்குகளை வைத்திருந்த சுமார் 13 ஊழியர்கள் ஒரே நாளில் பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் தேவிந்தர் பால் சிங் தன்னிடம் 21.14 லட்சம் பங்குகளை வைத்துள்ளார். தற்போது அவற்றின் மதிப்பு 121 கோடி ரூபாய்.

Also Read

முதலீட்டு பிரிவு தலைமை அதிகாரியான சீனிவாசன் ராம ஐயர் வசம் உள்ள 18.25 லட்சம் பங்குகளின் மதிப்பு சுமார் 105 கோடி ரூபாயாக உள்ளது. தலைமை அதிகாரிகளுள் ஒருவரான சீனிவாஸ் ஜெயின் 59 கோடி ரூபாய் பங்குகளை கொண்டுள்ளார். இதே போல தொடக்க காலத்தில் நிறுவனம் கொடுத்த பங்குகளை அப்படியே வைத்திருந்த பல ஊழியர்களும் தலா 1 கோடிக்கும் அதிகமாக லாபம் பார்த்துள்ளனர்.

2018ஆம் ஆண்டில் தான் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மேண்ட் ஊழியர்களுக்கு பங்கு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் பங்குகளை பெற்ற ஊழியர்கள் சிறந்த லாபம் பெற்றுள்ளனர். இந்த திட்டம், ஊழியர்களுக்கு 39 முதல் 455 ரூபாய் வரையிலான விலையில் பங்குகளை வழங்கியது. இன்று ஐபிஓ விலை 574 ரூபாயாக உயர்ந்திருப்பது, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

Recommended For You

ஒரு நிறுவனத்தில் நாம் வேலை செய்கிறோம் அந்த நிறுவனம் பெரிய வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இருந்தால் இது போல பங்குகளை வாங்கி வைத்தால் பின்னாளில் பெரிய லாபம் கிடைக்கும் என்பதற்கு இவர்களே உதாரணம். எஸ்பிஐ மேனேஜ்மெண்ட்ஸின் இந்த ஐபிஓ என்பது முழுமையாக பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் வாய்ப்பாக தான் அமைந்தது. அந்த வகையில் இது முதலீட்டாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நல்ல பலனை தந்த ஐபிஓ-ஆக மாறியுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+