எஸ்பிஐ பங்கு உங்கள் வசம் இருக்கா.. எவ்வளவு வரை அதிகரிக்கும் தெரியுமா.. நிபுணர்களின் சூப்பரான அப்டேட்!

பொதுவாக பங்கு சந்தையில் சமீபத்திய காலமாக வங்கி பங்குகளின் விலைகள் நல்ல ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் கடனுக்கான வட்டி அதிகரிப்பினை செய்து வருகின்றன.

இது வங்கிகளின் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நல்ல வளர்ச்சி

நல்ல வளர்ச்சி

இது நாட்டின் மிகப்பெரிய முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினை தாண்டி, நல்ல லாபம் கண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வங்கியில் FY23/FY24ல் அதன் இபிஎஸ் விகிதம் 10 - 15% வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 இலக்கு விலை?

இலக்கு விலை?

இவ்வங்கியின் இலக்கு விலையானது 700 - 700 ரூபாயாக அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது கடந்த 2020ன் குறைந்தபட்ச விலையில் இருந்து 300% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

இதற்கிடையில் இப்பங்கின் விலையானது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது,

 எஸ்பிஐ-ன் லாபம்

எஸ்பிஐ-ன் லாபம்

கடந்த செப்டம்பர் காலாண்டில் எஸ்பிஐ-யின் நிகரலாபம் 13,265 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7,627 கோடி ரூபாயாக இருந்தது. இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 14,752 கோடி ரூபாயாகவும், இதே லாபம் 13,656 கோடி ருபாயாகவும் உள்ளது.

 எஸ்பிஐ- இலக்கு விலை

எஸ்பிஐ- இலக்கு விலை

யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் எஸ்பிஐ-ன் 2021ல் இருந்தே ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் இலக்கு விலை 760 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் ரிட்டர்ன் ஆப் ஈக்விட்டி விகிதம் 13.3 - 16% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே எஸ்பிஐ-யின் துணை நிறுவனங்களுக்கு ஒரு பங்கிற்கு 205 ரூபாய் மதிப்பினையும் தரகு நிறுவனம் வழங்கியுள்ளது.

 நுவாமா இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ்-ன் கணிப்பு

நுவாமா இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ்-ன் கணிப்பு

இன்று இப்பங்கின் விலை காலை அமர்வில் 4.9% அதிகரித்து, 622.90 ரூபாயாக பிஎஸ்இ-யில் அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையில் 29% அதிகரித்துள்ளது.

நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனமும் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இது ஹோல்டு செய்து வைக்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

 வட்டி வருவாய்

வட்டி வருவாய்

இவ்வங்கியின் வட்டி வருவாய் விகிதமானது 12.8% அதிகரித்து, 35,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 2021ல் 31,184 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் நிகர வட்டி மார்ஜின் விகிதமானது 3.55% ஆகவும், இது கடந்த ஜூன் காலாண்டில் 3.23% ஆகவும், இது செப்டம்பர் காலாண்டில் 3.50% ஆகவும் இருந்தது.

 பல தரகு நிறுவனங்களும் கணிப்பு

பல தரகு நிறுவனங்களும் கணிப்பு

எலாரா நிறுவனம் இப்பங்கினை 717 ரூபாயாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இதே நிர்மல் பேங்க் இதன் இலக்கு விலையினை 718 ரூபாயாக கணித்துள்ளது. இதே மோதிலால் ஆஸ்வால் இப்பங்கின் விலையை 700 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே ஜேஎம் பைனான்ஷியல் இப்பங்கின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+