மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அவர்களின் இருப்பினில் டாப் 10 நிறுவனங்களில், 9 நிறுவனங்களில் முதலீடுகளைஅதிகரித்துள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.
இது லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் மட்டும் முதலீட்டினை குறைத்துள்ளது.
இது குறித்த PRIME தரவானது, மியூச்சுவல் பண்டுகள் 10 பங்குகளில், கிட்டதட்ட 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதில் 1.89 சதவீதத்தில் இருந்து, 6.89 சதவீதமாக முதலீட்டினை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பங்குகள் 9 - 20% வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளனர்.
தரவுகளின் படி, ஐசிஐசிஐ வங்கியில் ஜனவரி 31 நிலவரப்படி, மியூச்சுவல் பண்டுகள் 24.03% ஆக அதிகரித்துள்ளது. இது டிசம்பர் 31 நிலவரப்படி 23.32% ஆக இருந்தது. எனினும் இதன் மதிப்பு 1,44,947 கோடி ரூபாயில் இருந்து, 1,39,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ட்ரெண்ட்லைன் தரவின் படி, சராசரியாக ஐசிஐசிஐ வங்கி விலையானது 1084 ரூபாயாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இது 25.68% உயர்வினை எட்டலாம் என கணித்துள்ளது.
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது மியூச்சுவல் அதிகம் வைத்திருக்கும் பங்குகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 15%ள் இருந்து ஜனவரி மாதத்தில் 15.03% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இறுதியில் 1,36,237 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 1,34,434 கோடி ரூபாயாக இருந்தது. இப்பங்கின் விலையானது 1897 ரூபாயினை எட்டலாம் என ட்ரெண்ட் லைன் இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. இது 14.48% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் 15.43%ல் இருந்து, 15.57% ஆக அதிகரித்துள்ளது. இதில் முதலீடானது 99,769 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த மாத இறுதியில் 97,391 கோடி ரூபாயாக இருந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சராசரியாக 9% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 19% வரையில் அதிகரிக்கலாம்.
ஹெச்.டி.எஃப்.சி, ஐடிசி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் மியூச்சுவல் பண்டுகளில் 14 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி சராசரி இலக்கு விலையானது 15% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிசியின் பங்கு விலையானது 9% வரையிலும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 21.8% வரையிலும் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
ஏன் குறைப்பு?
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எல் & டி பங்குகளில் முதலீட்டினை குறைத்துள்ளனர். இதே உள்நாட்டு பண்டுகள் 17.3% அளவுக்கு பங்குகளை அதிகரித்துள்ளது. இதே இன்ஜினியரிங் மற்றும் கட்டிடம் நிறுவனம் உள்ளிட்ட துறைகளில், ஜனவரி 31 நிலவரப்படி 16 அடிப்படை புள்ளிகளாக குறைந்து, 17.3% ஆக இருந்தது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications