இந்திய பங்கு சந்தையில் சமீபத்திய நாட்களாகவே ஏற்ற இறக்கம் என்பது நிலவி வரும் நிலையில், பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் பல முக்கிய பங்குகளிலும் தாக்கம் இருந்து வருகின்றது.
அந்த வகையில் யெஸ் வங்கி பங்கானது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வசம் உள்ள யெஸ் வங்கி பங்கின் தற்போதைய விலை என்ன? இதில் எஸ்பிஐ எவ்வளவு ஹோல்டிங் வைத்துள்ளது? இதனை வாங்கலாமா? விற்பனை செய்யலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
எஸ்பிஐ வசம் யெஸ் வங்கி பங்கு
மார்ச் 6 அன்று யெஸ் வங்கியின் லாக் இன் காலம் முடிவடையவுள்ள நிலையில், இந்த வங்கி பங்கில் ஒரு பகுதியினை எஸ்பிஐ விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிறகு சற்றே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள வங்கியானது, நல்ல ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த வங்கியில் முன்னணி தனியார் ஈக்விட்டி குழுமமான கார்லைல் குழுமம் மற்றும் அட்வென்ட் ஆகியவை 9.99% பங்குகளை வைத்துள்ளன.
வைத்துக் கொள்ள விரும்பவில்லை
எஸ்பிஐ வசம் உள்ள யெஸ் வங்கி பங்கினை நிரந்தமாக வைத்துக் கொள்ள விரும்பவில்லை என தெரிகிறது. ஆக லாக் இன் காலத்திற்கு பிற அவற்றை விற்பனை செய்யலாம் என தெரிகின்றது. இது படிப்படியாக செய்யலாம் என தெரிகின்றது.
விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
ஆக விரைவில் எஸ்பிஐ தனது பங்கு குறைப்பு குறித்தான அறிவிப்பு குறித்து வெளியிடலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆர்பிஐ-க்கும் கடிதம் அனுப்பலாம் என தெரிகிறது. ஆக எஸ்பிஐ யெஸ் வங்கியின் பங்குகளை குறைத்தால், அது யெஸ் வங்கி பங்கினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எஸ்பிஐ வசம் எவ்வளவு?
ஆரம்பத்தில் யெஸ் வங்கியின் 49% பங்கினை வாங்கியிருந்த எஸ்பிஐ, கடந்த டிசம்பர் 31, நிலவரப்படி, 26.14% பங்குகளை மட்டுமே வைத்திருந்ததாக பங்கு சந்தை தரவுகள் காட்டுகின்றது. ஆக இந்த விகிதம் இனியும் குறையலாம் என தெரிகின்றது. யெஸ் வங்கி பெரும் பிரச்சனையில் தத்தளித்து வந்த நிலையில் எஸ்பிஐ வசம் கணிசமான பங்கினை வாங்கியது.
லாக் இன் காலம் முடிவு
மறுசீரமைப்பு திட்டத்தின் படி மூலதனம் செலுத்தப்பட்ட நாளில் இருந்து மூன்று வருடத்திற்குள் தங்களது இருப்பினை 26% கீழாக குறைத்திருக்க முடியாது. ஆக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் யெஸ் வங்கியை மீட்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கையை எடுத்ததை அடுத்து பல்வேறு வங்கிகளும் கைகோர்த்தன. இதில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்.டி எப்.சி உள்ளிட்ட பலவும் அந்த சமயத்தில் உதவி செய்தன. இதில் எஸ்பிஐ-யின் பங்கும் முக்கியமானது.
3 ஆண்டுகள் கண்டிசன்
எனினும் மேற்கண்ட வங்கிகள் வைத்திருந்த பங்குகளில் குறைந்தபட்சம் 75% பங்கினை, 3 ஆண்டுகளுக்கு வைத்டிருக்க வேண்டும். இது அனைத்து பங்குதாரர்களுக்கும் விதிக்கப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஆகியவை முறையே 2.61%, 1.57% மற்றும் 1% பங்குகளை டிசம்பர் மாத இறுதியில் வைத்துள்ளன. அரசுக்கு சொந்தமான எல்ஐசி 4.34%மும், ஹெச்.டி.எஃப்.சி 3.48%மும் பங்கு வைத்துள்ளன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications