இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது. இவ்வங்கியின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் செப்டம்பர் காலாண்டில் 28% அதிகரித்து ரூ.18,331 கோடியை எட்டியுள்ளது, இது சந்தை எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது.
மேலும் எஸ்பிஐ வங்கியின் வட்டி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள வித்தியாசத்தை அளவிடும் நிகர வட்டி வருவாய் (NII) வருடாந்திர அடிப்படையில் 5% அதிகரித்து ரூ.41,620 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 39,500 ரூபாயாக உள்ளது.

இதோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இயக்க லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 51% அதிகரித்து ரூ.29,294 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு வலுவான கடன் வளர்ச்சி மற்றும் சிறந்த சொத்து தரம் ஆகியவை காரணமாகும். வங்கியின் சொத்து தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி மார்ஜின் அளவு 16 அடிப்படை புள்ளிகள் குறைந்து 3.27 சதவீதமாக உள்ளது, இது கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் 3.43 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. SBI இன் மூலதன போதுமான விகிதம் (CAR) 13.76% ஆக உள்ளது, இது வங்கியின் நிதி நிலைத்தன்மையையும் எதிர்கால வளர்ச்சியைப் பூர்த்தி செய்யும் திறனையும் உறுதி செய்கிறது.
வலுவான நிதி செயல்பாட்டின் போதிலும், SBI இன் பங்கு விலை வெள்ளிக்கிழமை தேசிய பங்குச்சந்தையில் (NSE) கிட்டத்தட்ட 3% குறைந்து 834.6 ரூபாயாக உள்ளது. இதற்குக் காரணம் நிதி செலவு அதிகரித்துள்ளதும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் தான்.


Click it and Unblock the Notifications