இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. பங்குச்சந்தையில் சிறப்பாக செயல்படும் ஒரு பங்காக எஸ்பிஐ பங்குகள் இருக்கின்றன. எஸ்பிஐ பங்குகள் செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று ஒரே நாளில் 3%க்கும் அதிகமாக உயர்ந்தன.
ஜப்பான் நிதி நிறுவனமான சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு (SMBC) எஸ்பிஐ வங்கி, யெஸ் வங்கியில் தான் வைத்திருந்த 13.18% பங்குகளை ரூ. 8,889 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, எஸ்.பி.ஐ பங்குகள் ரூ. 857.40 என்ற அளவில் வர்த்தகமாகி, தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உயர்வு கண்டன.

இந்த ஆண்டு மே மாதம், SMBC நிறுவனம் யெஸ் வங்கியில் 20% பங்குகளை வாங்க ஒப்புதல் தெரிவித்தது. இந்தியாவின் தனியார் வங்கியில் செய்யப்படும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், SMBC நிறுவனம் யெஸ் வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக மாறும்.
இதன் ஒரு பகுதியாக தான் எஸ்பிஐ தன் வசம் இருந்து 13% பங்குகளை (சுமார் ரூ. 8,889 கோடி மதிப்பு கொண்டது) SMBCக்கு விற்பனை செய்துள்ளது. ஆக்சிஸ் வங்கி, பந்தன் வங்கி, பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளிடமிருந்து மீதமுள்ள 7% பங்குகளையும் SMBC வாங்குகிறது.
இந்த வங்கிகள் 2020 ஆம் ஆண்டில் யெஸ் வங்கி மறுசீரமைக்கப்பட்டபோது ஒரு பங்குக்கு சுமார் ரூ. 10 என்ற விலையில் முதலீடு செய்திருந்தன."எஸ்.பி.ஐ மற்றும் யெஸ் வங்கியின் பிற பங்குதாரர்கள் SMBC-க்கு பங்குகளை விற்றது இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டைக் குறிக்கிறது. இந்த பரிவர்த்தனைக்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய போட்டி ஆணையம் உள்ளிட்ட அனைத்து ஒழுங்குமுறை மற்றும் சட்டரீதியான ஒப்புதல்களும் கிடைத்துள்ளன" என எஸ்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விற்பனைக்குப் பிறகும், எஸ்பிஐ யெஸ் வங்கியில் 10.8% பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கும். எஸ்பிஐ தலைவர் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி, "2020 இல் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட யெஸ் வங்கி மறுசீரமைப்புத் திட்டம் ஒரு புதுமையான, பொதுத்துறை – தனியார் துறை கூட்டாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய அரசு இதை முழுமையாக ஆதரித்தது. 2020 இல் நாங்கள் முக்கிய பங்குதாரராக இணைந்ததிலிருந்து யெஸ் வங்கியின் மாற்றத்திற்கு நாங்கள் அளித்த ஆதரவைப் பற்றி பெருமைப்படுகிறோம்" என்று கூறினார்.
மேலும், இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் எஸ்.பி.ஐ மற்றும் பிற வங்கிகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது என்றார். SMBC போன்ற ஒரு புகழ்பெற்ற உலகளாவிய நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்கி இருப்பது அந்த வங்கியின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால லட்சியங்களுக்கும் பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications