ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது கடந்த டிசம்பர் 2022ல் 629.55 ரூபாயாக உச்சம் எட்டியது. எனினும் இந்த உச்சத்திற்கு பிறகு சுமார் 525 ரூபாய் என்ற லெவலிலேயே காணப்படுகின்றது.
இது வரலாற்று உச்சத்தில் இருந்து சுமார் 17% சரிவில் காணப்படுகிறது.
எனினும் இப்பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்
இது குறித்து மோதிலால் ஆஸ்வால் பண்டமெண்டலாக இவ்வங்கி வலுவான அடிப்படையை கொண்ட ஒரு பொதுத்துறை வங்கியாக உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் இவ்வங்கி பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வலுவான கடன் வளர்ச்சி, மார்ஜின் விரிவாக்கம், பத்திர செயல்பாடு என பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில் இதன் வளர்ச்சியானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி வளர்ச்சி அதிகரிக்கலாம்
தொடர்ந்து வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது அதிகரித்து வரும் சூழலில், கடன் வளர்ச்சி அதிகரிக்கலாம். இது தவிர நிகர வட்டி வருவாய் என்பதும் அதிகரிக்கலாம். இதற்கிடையில் வங்கியில் டெபாசிட் விகிதமும் அதிகரித்துள்ளது. வங்கியின் சொத்து விகிதமும் வளர்ச்சி கண்டு வருகின்றது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
இதற்கிடையில் வங்கியின் மார்ஜின் விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வங்கியின் நீண்டகால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம். இது இவ்வங்கி பங்கு விலை அதிகரிக்க காரணமாகவும் அமையலாம். குறிப்பாக நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலை அதிகரிக்கலாம்.
வாராக்கடன் சரிவு
குறிப்பாக எஸ்பிஐ-யின் வலுவான கடன் வளர்ச்சி விகிதமானது அதன் நீண்டகால நோக்கில் வளர்ச்சிக்கு சாதகமாக காரணமாக அமையலாம். இதன் காரணமாக இதன் மார்ஜின் விரிவடையலாம். இதற்கிடையில் இதன் வாராக்கடன் விகிதமும் சரிவினைக் கண்டு வருகின்றது. ஆக இது மேற்கொண்டு வளர்ச்சிக்கு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் தான் எஸ்பிஐ பங்கு விலையானது நீண்டகால நோக்கில் 700 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய விலையில் இருந்து 40% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பங்கு விலையானது குறையும்போது வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications