நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) பங்கு முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தர போகிறது என பன்னாட்டு தரகு நிறுவனங்கள் புதிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளன.
இன்று பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 980 ரூபாயாக இருக்கிறது. இது இன்னமும் 30%க்கும் மேல் வளர்ச்சி அடையும் என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. ஜெஃப்ரீஸ் இந்திய வங்கித்துறையின் அசுர வளர்ச்சியை சுட்டிக்காட்டி, எஸ்பிஐ பங்குகள் மீது மிகவும் பாசிடிவான பார்வையை முன்வைத்துள்ளது.

அதே போல மோதிலால் ஓஸ்வால், எஸ்பிஐ பங்கின் வலுவான ஃபண்டமெண்டல்ஸ் , நிலையான கடன் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட சொத்து ஆகியவற்றின் அடிப்படையில், தற்போதைய விலையிலிருந்து சுமார் 34 சதவீதம் வரை கூடுதலாக பங்கு விலை உயரலாம் என கணித்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு லாபகரமானதாக இருக்கும் என்றும், பல நிறுவனங்கள் இதற்கு வாங்கலாம் என்ற பரிந்துரையையும் வழங்கியுள்ளன.
எஸ்பிஐ வங்கியின் கடன் வழங்கும் பிரிவு தொடர்ந்து ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அதே போல வங்கியின் நிகர வட்டி வரம்பு மற்றும் முதலீட்டின் மீதான லாபம் ஆகியவை திருப்திகரமாக உள்ளன என தரகு நிறுவனங்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடும் போது வங்கியின் வாராக்கடன் பிரச்சினைகள் பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வங்கியின் நிதிநிலை மிகவும் வலுவாக மாறியுள்ளது என்கின்றன.
நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு எஸ்பிஐ ஒரு சிறந்த லார்ஜ் கேப் பங்காக பார்க்கப்படுகிறது. எனவே தற்போதைய விலையில் வாங்குவது சாதகமான பலனை தரும் என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. ஏற்கனவே எஸ்பிஐ பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள், அதனை அவசரப்பட்டு விற்காமல் தொடர்ந்து வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளன. குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டின் முதன்மை வங்கி என்ற அந்தஸ்தும், அரசின் ஆதரவும் எஸ்பிஐ பங்கின் பலமாக விளங்குவதாக இந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்பிஐ பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 1,234 ரூபாய் ஆகும். எஸ்பிஐ பங்கினை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் 68% லாபத்தையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 84 % லாபத்தையும் முதலீட்டாளர்களுக்கு தந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் டிவிடெண்ட் தரக்கூடிய ஒரு பங்காகவும் இது திகழ்கிறது. கடந்த செப்டம்பர் உடன் முடிந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கி 25,000 கோடி ரூபாய் லாபத்தை பெற்றிருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

