எஸ்பிஐ பங்கு உங்ககிட்ட இருக்கா.. தரகு நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனியார் வங்கிகளுக்கு போட்டியாக செயல்பட்டு வருகின்றது. தனியார் வங்கிகளை விட பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகின்றது.

இதற்கிடையில் இவ்வங்கியின் செயல்பாடானது தொடர்ந்து விரிவடைந்து வருகின்றது. இந்நிலையில் இவ்வங்கி பங்கின் விலையானது 583 ரூபாய் என்ற லெவலை வரலாறு காணாத அளவுக்கு இந்த வார தொடக்கத்தில் எட்டியது.

இத்தகைய சூழலில் ஐசிஐசிஐ டேரக்ட் நிறுவனம் எஸ்பிஐ பங்கினை தொடர்ந்து ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

உறுதியான ஏற்றம்

உறுதியான ஏற்றம்

என்ன காரணம்? ஏன் இந்த பங்கினை வாங்கலாம்? இன்னும் விலை அதிகரிக்கலாம் என கணித்துள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடானது 4 ஆண்டுகளில் கீழ் நோக்கிய அழுத்தத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது அந்த லெவலில் இருந்து உறுதியான ஏற்றத்தினை கண்டுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பிரேக் அவுட் விலை

பிரேக் அவுட் விலை

குறிப்பாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் பங்கு விலையானது வலுவான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இதன் 12 மாத பிரேக் அவுட் விலை 546 என்ற லெவலை கணித்துள்ளது. இது எஸ்பிஐ-யின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 4 வாரங்களில் கண்ட சரிவினை, 2 வாரங்களில் வேகமாக மீட்ட நிலையில், இது மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கு விலை

இலக்கு விலை

இப்பங்கின் விலையானது அடுத்து வரும் மாதங்களில் 634 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் விலை 546 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கனித்துள்ளது.

தொடர்ந்து இந்த வங்கியின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இதன் மூலதனமும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்த வங்கி பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

கடந்த சில காலாண்டுகளாகவே நல்ல வளர்ச்சியினை கண்டு வரும் இவ்வங்கி, இனி வரும் காலாண்டிலும் வளர்ச்சியினை தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், அது வங்கிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

இன்று கிட்டதட்ட 52 வார உச்ச விலைகு அருகில் வர்த்தமாகியுள்ள நிலையில், இப்பங்கின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் உச்சத்தில் உள்ளது. கடந்த 1 ஆண்டில் இப்பங்கின் விலையானது 11.63% அதிகரித்தும். இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையில் 25.87% அதிகரித்தும் காணப்படுகின்றது. இதே கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 105.48% அதிகரித்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இவ்வங்கியின் சந்தை மூலதனம் 5,17,225 கோடி ரூபாயாகும்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

என்.எஸ்.இ-யில் எஸ்பிஐ பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 579.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 585 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 577.60 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 579.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 584.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 577.75 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 586.10 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 425 ரூபாயாகவும் உள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+