கடந்த வாரத்தில் முதல் 10 சென்செக்ஸ் நிறுவனங்களின் சந்தை மூலதனம் (மார்க்கெட் கேப்) ரூ.1,65,180.04 கோடி குறைந்துள்ளது. கடந்த வாரத்தில், மொத்தம் 8 நிறுவனங்களின் மதிப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தங்கள் லாபத்தை அதிகரித்துள்ளன. இந்த சரிவில் தனியார் துறை எச்டிஎப்சி வங்கியும், பொதுத்துறை எஸ்பிஐ வங்கியும் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.
HDFC வங்கி மற்றும் SBI ஆகியவை இந்த சரிவில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன. இதன் சந்தை மதிப்பு முறையே ரூ.46,729.51 கோடி மற்றும் ரூ.34,984.51 கோடி குறைந்துள்ளது. HDFC வங்கியின் சந்தை மூலதனம் ரூ.12,94,025.23 கோடியாகவும், SBI இன் சந்தை மூலதனம் ரூ.7,17,584.07 கோடியாகவும் குறைந்துள்ளது. இது தவிர, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பு ரூ.27,830.91 கோடி குறைந்து ரூ.5,61,329.10 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.22,057.77 கோடி குறைந்து ரூ.17,15,498.91 கோடியாகவும் உள்ளது.

இருப்பினும், இந்த சரிவை மீறி இரண்டு நிறுவனங்கள் தங்கள் சந்தை மூலதனத்தை அதிகரித்தன. இன்ஃபோசிஸின் சந்தை மதிப்பு ரூ.13,681.37 கோடி அதிகரித்து ரூ.7,73,962.50 கோடியாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 416.08 கோடி அதிகரித்து ரூ.15,00,113.36 கோடியாகவும் இருந்தது.
முதல் 10 சென்செக்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து மதிப்புமிக்க நிறுவனங்களில் நம்பர் 1 ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி , பார்தி ஏர்டெல் , இன்ஃபோசிஸ், எஸ்பிஐ,ஐடிசி,எல்ஐசி, மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் தரவரிசையில் உள்ளது.
இதற்கிடையில், அடுத்த வாரத்தில் நீலம் லினன்ஸ் மற்றும் கார்மென்ட்ஸ் பங்குகள் நவம்பர் 18 ஆம் தேதி NSE SME இல் பட்டியலிடப்படும். அதே நேரத்தில் மங்கள் கம்ப்யூஷன் நவம்பர் 20 ஆம் தேதி BSE SME இல் பட்டியலிடப்படும். ஓனிக்ஸ் பயோடெக் பங்குகள் நவம்பர் 21 அன்று NSE SME இல் பட்டியலிடப்படும்.
பங்குச் சந்தையின் கடைசி வர்த்தகம் ஆன வியாழக்கிழமை நிஃப்டி 0.11% சரிந்து 23,532 ஆக இருந்தது. இது ஏப்ரல் 2023 க்குப் பிறகு முதல் முறையாக அதன் 200 நாள் நகரும் சராசரிக்குக் கீழே முடிந்தது. சென்செக்ஸ் 0.14% சரிந்து 77,580 ஆக முடிந்தது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications