இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கலாம்.. 5 பங்குகளை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்..!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையானது கடந்த வாரத்தில் சற்றே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. எப்படியிருப்பினும் இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறின.

கடந்த வாரம் ஐந்து அமர்வுகளில் 4 அமர்வுகளில் அன்னிய முதலீட்டாளர்கள் வாங்குபவர்களாக இருந்தனர். இதே உள்நாட்டு 2000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை நிகர வாங்குபவர்களாக இருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு வாங்குபவர்கள் கடுமையான சரிவுக்கு பிறகு, இன்றும் திருத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி வாங்கலாமா?

நிஃப்டி வாங்கலாமா?

ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அனுஜ் குப்தா, நிஃப்டியின் வலுவான சப்போர்ட் லெவல் 17,750 ஆகவும், ஆக அப்படி ஏதும் சரிவினைக் கண்டால் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கிடையில் ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் பல நல்ல நிறுவனங்கள் முதலீட்டாளர்களை கவரும் விதமாக உள்ளன. அவற்றில் பல நிறுவனங்கள் தங்களின் 3வது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளன. இந்த வாரத்தில் 5 நிறுவனங்களின் பங்கினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)

எஸ்பிஐ அதன் முக்கிய சப்போர்ட் விலையில் இருந்து ஏற்றம் கண்டு வருகின்றது. டெக்னிக்கலாகவும் முக்கிய சப்போர்ட் ஆகவும் உள்ளது. அதன் தற்போதைய சந்தை இலக்கு விலை 555 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 514 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. ஆக வங்கி பங்குகளில் இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL)

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஓவர் சோல்டு ஜோனில் உள்ளது. அது முக்கிய லெவலில் இருந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினை வாங்க கடனுடன் உள்ள என்சிஎல்டி ஒப்பந்தம் கொடுத்துள்ளது. ஆக இந்த நிறுவனம் ஏற்றம் காணலாம் என நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தற்போதைய சந்தை விலையில் இருந்து இலக்கு விலையானது 2490 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. எனினும் ஸ்டாப் லாஸ் ஆக 2375 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது.

 

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த வாரத்தில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம். என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம். இதன் வார இலக்கு விலையானது 440 ரூபாயாக உள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் 389 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

கோல் இந்தியா

கோல் இந்தியா

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது தேவையானது அதிகரித்து வரும் சூழலில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சம்மர் சீசனில் அதிகரிக்கும் தேவை காரணமாக விலை அதிகரிக்கலாம். இதன் இலக்கு விலை 230 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் ஆக 209 ரூபாயினையும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஓ.என்.ஜி.சி

ஓ.என்.ஜி.சி

 

எண்ணெய் சுத்திகரிப்பாளரான ஓ.என்.ஜி.சி கடந்த வாரம் நல்ல ஏற்றத்தினை கண்ட நிலையில், இப்பங்கின் விலையானது வரும் வாரத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசு விண்ட் பால் வரியினை அதிகரித்துள்ள நிலையில், இதுவும் நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இலக்கு விலை 165 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஸ்டாப் லாஸ் 149 ரூபாயாக கொடுத்துள்ளனர்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+