வங்கி பங்குகள் நடப்பு ஆண்டில் இதுவரையில் பெரியளவில் லாபம் கொடுக்காவிட்டாலும், தொடர்ந்து நல்ல கடன் வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்றன. இதன் சொத்தின் தரமும் அதிகரித்து வருகின்றது. எனினும் அதானி குழும பங்குகள் சரிவால் இந்திய பங்கு சந்தையிலும் அதன் தாக்கம் உள்ளது.
குறிப்பாக வங்கி பங்குகளிலும் தாக்கம் என்பது உள்ளது. பல்வேறு வங்கி பங்குகளும், அதன் 52 வார உச்ச விலையில் இருந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
எஸ்பிஐ & பாங்க் ஆப் பரோடா
எஸ்பிஐ பங்கு விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து 22% சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது 629.65 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே பாங்க் ஆப் பரோடாவின் பங்கு விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து, 25% சரிவினைக் கண்டு, 197.20 ரூபாயாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
நிகரலாபம் எவ்வளவு?
பாங்க் ஆப் பரோடா வங்கியின் நிகரலாபம் டிசம்பர் காலாண்டில் 75% அதிகரித்து, 3853 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மோசமான கடன் சரிவினைக் கண்டுள்ளது.
இதே எஸ்பிஐ நிகரலாபமானது 68% சரிவினைக் கண்டு, 14,205.34 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 8431.88 கோடி ரூபாயாக இருந்தது.
எந்த வங்கி நல்ல லாபம் கொடுத்துள்ளது?
எஸ்பிஐ பங்கு விலையானது 200 dmaவினை தாண்டியுள்ளது. இது 540 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் 500 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இருந்து 530 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 500 ரூபாய் என்ற லெவலை உடைத்தால், 475 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா பங்கின் விலையானது 170 ரூபாய் என்ற லெவலில் இருந்து சரிந்து, மேலும் குறையலாம். இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 146 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இந்த லெவலில் இருந்து ஏற்றம் கண்டால் மீண்டும் ஏற்றம் காணலாம். அதேசமயம் இந்த லெவலை உடைத்தால் மேலும் சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
செல்லிங் அழுத்தம்
எஸ்பிஐ பங்கு விலையானது செல்லிங் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவில் காணப்படுகின்றது. எனினும் சில தரகு நிறுவனங்கள் தொடர்ந்து வாங்க பரிந்துரை செய்து வருகின்றன. எப்படியிருப்பினும் மொத்தமாக பார்க்கும்போது சந்தையில் ஒட்டுமொத்தமாக செல்லிங் அழுத்தத்தில் காணப்படுகின்றது.
அதிகரிக்குமா?
இதே பாங்க் ஆப் பரோடா பங்கினை வாங்கலாம் என தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. எனினும் அதானி குழுமத்தில் எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எக்ஸிம் வங்கி உள்ளிட்ட வங்கிகள் 6071 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளன. இன்னும் நிலுவை தொகையானது கொடுக்கப்படுமா? என்ற கேள்வியும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இப்பங்குகள் அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications