சென்னை: இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி, தனது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு IPO வெளியிட SEBI அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட முயற்சிக்கும் இரண்டாவது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஏதர் எனர்ஜி உருவெடுத்துள்ளது.
ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் IPO-வில் ரூ.3,100 கோடி வரை புதிய பங்கு வெளியீடு மற்றும் தற்போதைய பங்குதாரர்களால் 2.2 கோடி பங்குகள் வரை விற்பனை செய்யப்படும். செப்டம்பர் மாதம் SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்ட DRHP-யில் இந்த தரவுகளைக் குறிப்பிடப்பட்டு உள்ள வேளையில் தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

ஏதர் எனர்ஜி நிறுவனர்களான தருண் சஞ்சய் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் உள்ளிட்ட பல முக்கிய முதலீட்டாளர்கள் OFS பங்கு விற்பனையில் பங்கேற்கின்றனர். ஒவ்வொருவரும் 10 லட்சம் பங்குகள் வரையில் பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.
இவர்களுடன் ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களான சிங்கப்பூரின் அரச சொத்து நிதி நிறுவனமான GIC, தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி II (NIIF-II), இன்டர்நெட் ஃபண்ட் III, 3ஸ்டேட் வென்ச்சர்ஸ், IITM இன்குபேஷன் செல் மற்றும் IITMS ரூரல் டெக்னாலஜி அண்ட் பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய பிற முக்கிய பங்குதாரர்களும் பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.
இதேவேளையில் ஏதர் எனர்ஜியில் பெரும் முதலீட்டாளராக இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் தனது கையிருப்பில் இருக்கும் 37.2% பங்குகளை தொடர்ந்து தக்கவைத்திருக்கும். இதன் மூலம் இந்த ஐபிஓ-வில் எவ்விதமான பங்குகளையும் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்யாது.
எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில், விற்பனை அளவின் அடிப்படையில் ஏதர் எனர்ஜி தற்போது இந்தியாவின் நான்காவது இடத்தில் உள்ளது. ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் முதல் 3 இடத்தில் உள்ளது.
மத்திய அரசின் வாகன் போர்டல் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் ஏதர் எனர்ஜி நிறுவனம் சுமார் 1,25,569 வாகனங்களை விற்பனை செய்து பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த IPO, ஏதர் எனர்ஜி நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான வளர்ச்சி படியாக உள்ளது. இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் பணத்தை தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், வளர்ந்து வரும் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தவும் நிறுவனத்திற்கு உதவும்.
IPO வெற்றிகரமாக நிறைவடைந்தால், ஏதர் எனர்ஜி தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் முயற்சிகள் உள்ளிட்ட அதன் வர்த்தக வளர்ச்சிக்கு பெரும் பலத்தை சேர்க்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications