இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவில் அதிக்கம் செலுத்தும் பெரும் பணக்காரர்களின் குடும்ப அலுவலகங்களை பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அம்பானி, அதானி உட்பட நாட்டின் பல பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் குடும்ப அலுவலங்கள் மூலம் பெரிய அளவிலான முதலீட்டை செய்து வருகின்றனர். இன்னும் பலர் வெளிநாட்டில் குடும்ப அலுவலகங்களை திறந்து, பல வழிகளில் முதலீட்டை திரட்டி அதன் மூலம் முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செபி இந்த குடும்ப நிறுவனங்கள் எப்படி இயங்குகிறது, எப்படி முதலீடு செய்கிறது என்பதை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பல பில்லியனர்களை செபி அழைந்து முக்கிய விபரங்களை சேகரிக்க துவங்கியுள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் கூட செபி குடும்ப நிறுவனங்கள் மூலம் முதலீட்டை கொண்டு வரும் பணக்காரர்களை அழைத்து நேரில் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் முதல் படியாக குடும்ப அலுவலகங்கள், அவர்களின் சொத்துக்கள் மற்றும் முதலீட்டு வருமானங்களை முதல் முறையாக செபிக்கு வெளிப்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் முதலீட்டு நிறுவனங்களின் investment vehicles-ஐ நிர்வாகம் செய்ய தனி பிரிவு உருவாக்கி ஒழுங்குமுறை செய்வது குறித்தும் செபி ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது இந்தியாவில் குடும்ப அலுவலகங்களுக்கு தனியான விதிமுறை இல்லாத நிலையில், செபி இந்த மாற்றத்தின் மூலம் முதலீட்டு சந்தையில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
பெரும் பணக்காரர்களின் குடும்ப அலுவலகங்கள், பங்குச் சந்தையில் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்து, சந்தை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்குகின்றன. இதை கண்காணிக்கவே செபி உள்ளூர் குடும்ப நிறுவனங்களின் முதலீட்டு நடவடிக்கைகளில் அதிகப்படியான விபரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் ஜேன் ஸ்ட்ரீட் சம்பவம் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பண பலம் கொண்ட முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையின் போக்கை மாற்றி அமைக்கிறது. இதனால் பெரும் முதலீடுகள் வரும் அனைத்து வழிகளையும் தற்போது செபி கண்காணிக்க துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications