இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக செமிகண்டக்டர் துறை இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட தொடங்கியுள்ளன. மத்திய அரசும் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போதைய சூழலில் இந்தியாவில் செமிகண்டக்டர் துறை சந்தையின் மதிப்பு என்பது 23.2 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. 2028 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 80.3 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். அதாவது ஆண்டு வளர்ச்சி விகிதம் 17.10 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் செமிகண்டக்டர் துறையை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அண்மைக்காலமாக கணிசமாக வளர்ந்து வருகின்றன.

அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு ஓராண்டு காலத்தில் 247% லாபத்தை பெற்று தந்துள்ளது செமிகண்டக்டர் துறை நிறுவன பங்கு. மாஸ் சிப் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Moschip Technologies Limited) நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது .
இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 88 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை 9ஆம் தேதி பங்குச்சந்தையில் ஒரு பங்கின் மதிப்பு 292 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5596 கோடி ரூபாய் ஆகும். இந்த பங்கின் ஃபேஸ் வேல்யூ 2, புக் வேல்யூ 14.49. இந்த நிறுவனத்தின் வருமானத்தை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டில் 176 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் லாபம் 5 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு 120 கோடி ஆகும்.
இந்த நிறுவன பங்கினை பொருத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 247 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. ஐந்தாண்டு காலத்தில் 1700 சதவீத லாபத்தை வழங்கியுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இதன் பங்கு மதிப்பு கிட்டதட்ட 9 சதவீதம் உயர்ந்தது என மும்பை பங்குச்சந்தை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று மாத காலத்தில் 188 சதவீதம் இது வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிகிறது. இந்த நிறுவன பங்குகளை பொறுத்தவரை 49 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் 47 சதவீதம் புரமோட்டர்கள் வசமும் இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் 2.80 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.
மாஸ் சிப் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் ஏரோஸ்பேஸ், ராணுவம்,, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு சாதனங்கள் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பங்கள், மருத்துவத்துறை , நெட்வொர்க்கிங் மற்றும் டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான பல்வேறு சிப்களை வடிவமைத்து வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் தன்னுடைய கையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை வைத்திருக்கிறது. கடந்த மாதத்தில் கூட இந்த நிறுவனம் அட்வாஸ்டு கம்ப்யூட்டிங் டெவலப்மெண்ட் மையத்திடமிருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டு மார்ச்சை விட 2024 ஆம் ஆண்டு மார்ச்சில் 40 சதவீதம் என அதிகரித்துள்ளது.
story written by: Devika
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications