1. கடந்த பல மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த அமெரிக்க சீன வர்த்தகப் போரில் சுமூகமான தீர்வுகள் காணப்பட்டு வருவது.
2. இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நேரடி முதளீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்பை, 24 சதவிகிதத்தில் இருந்து, அந்தந்த துறையில் விதித்து இருக்கும் உச்ச வரம்பு அளவுக்கு உயர்த்த இருப்பது.

3. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் லாபம் பார்க்க இந்திய சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கி இருப்பது போன்ற செய்திகளில் இன்று சந்தை பட்டையைக் கிளப்பி இருக்கிறது.
டெக்னிக்கலாகப் பார்த்தால், 41,150 லெவல்களில் இரண்டு டாப் உருவானது. சென்செக்ஸ் அந்த 41,150 என்கிற ரெசிஸ்டென்ஸை அசல்டாக உடைத்து, இன்று புதிய உச்சத்தையே தொட்டு 41, 352 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே 41, 950 வரை அசால்டாக முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது.
சந்தையில் இதே பாசிட்டிவ் செண்டிமெண்ட் நிலவினால்... 41,500 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,750 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இறக்கம் காணத் தொடங்கினால் 41,000-த்தை முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,938 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,052 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 413 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,082 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,165 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,705 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,441 பங்குகள் ஏற்றத்திலும், 1,067 பங்குகள் இறக்கத்திலும், 197 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,705 பங்குகளில் 47 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 131 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், வேதாந்தா, ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. க்ராசிம், கெயில், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications