கடந்த டிசம்பர் 23, 2019 குளோசிங் பெல் செய்தியிலேயே, புதிய ஏற்றங்கள் சிரமமே எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, டிசம்பர் 23, 2019-க்குப் பிறகு எந்த ஒரு புதிய உச்சங்களையும் சென்செக்ஸ் தொடவில்லை.
ஆனால் இன்றைய சென்செக்ஸ் சார்ட் பேட்டனைப் பார்க்கும் போது மீண்டும் ஏற்றத்துக்கான பேட்டன் உருவாகி இருப்பதாகவே தெரிகிறது. கடந்த டிசம்பர் 23-க்குப் பின் தொடர்ந்து இறக்கம் கண்டு வந்த சென்செக்ஸ், நேற்றைய ஓப்பனிங்கை விட, இன்றைய குளோசிங் கூடுதலாக இருக்கிறது. எனவே டிரெண்ட் மாறியது போலத் தான் தெரிகிறது.

எனவே வரும் திங்கட்கிழமை, ஏதாவது நல்ல செய்தி வந்து சென்செக்ஸ் ஏற்றம் கண்டால், 41,750 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,950 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை, இறக்கம் காணத் தொடங்கினால் 41,350-ஐ முதல் சப்போர்ட்டாகவும், 41,150-ஐ இரண்டாவது சப்போர்ட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,163 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,297 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,575 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 411 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,172 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,245 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,711 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,520 பங்குகள் ஏற்றத்திலும், 1,023 பங்குகள் இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,711 பங்குகளில் 69 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 115 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஆக்ஸிஸ் பேங்க், கோல் இந்தியா, பிபிசிஎல், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்பிஐ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், விப்ரோ, பிரிட்டானியா, கோட்டக் மஹிந்திரா, பார்தி இன்ஃப்ராடெல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications