40,509 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்! சூப்பர் ஏற்றம் கண்ட வங்கி பங்குகள்!

பிப்ரவரி 2020-க்குப் பிறகு, நேற்று தான் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த ஏற்றம் இப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நேற்று (08 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,182 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,226 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,585 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 326 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,509 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

வங்கிப் பங்குகள்

வங்கிப் பங்குகள்

இன்று பங்குச் சந்தை வர்த்தகத்தில், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பந்தன் பேங்க், ஆர்பிஎல் பேங்க் என பல தனியார் வங்கிப் பங்குகள் 3 சதவிகிதத்துக்கு மேல் விலை ஏற்றம் கண்டு இருக்கின்றன.
அதே போல எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க் போன்ற அரசு வங்கிகள் மூன்று சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டு இருக்கின்றன.

மும்பை பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச் சந்தை நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 15 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,854 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,230 பங்குகள் ஏற்றத்திலும், 1,454 பங்குகள் விலை இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 112 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி பேங்க், லார்சன் & டியூப்ரோ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. சன் பார்மா, ஏஷியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (09 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.49 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.29 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.15 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று (09 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+