திடீர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்! 250 புள்ளிகள் இறக்கத்தில் சென்செக்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், 40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. ஆனால் இன்று திடீரென இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. நேற்று (13 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,625 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,623 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

திடீர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்! 250 புள்ளிகள் இறக்கத்தில் சென்செக்ஸ்!

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,623 புள்ளிகளைத் தொட்டது. தற்போது நேற்றைய குளோசிங் புள்ளியை விட 250 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,375 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.

சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? எந்த செக்டார் இண்டெக்ஸ் எப்படி வர்த்தகமாகின்றன? ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 9 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 21 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 1,997 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 681 பங்குகள் ஏற்றத்திலும், 1,223 பங்குகள் விலை இறக்கத்திலும், 93 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 58 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

டாப் 30 பங்குகள் ஏற்றம் இறக்கம்

பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், டைடன், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
என் டி பி சி, ஓ என் ஜி சி, பவர் கிரிட், டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக்னாலஜி போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (14 அக்டோபர் 2020) ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 0.92 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்

நேற்று (13 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.53 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.64 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.91 % இறக்கத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 0.10 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex 30 index down 250 points trading at 40375 on 14 October 2020

The Bombay Stock exchange benchmark index sensex 30 index down 250 points trading at 40375 on 14 October 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X