425 புள்ளிகள் ஏற்றம்! 40,408 புள்ளிகளில் மாஸ் காட்டும் சென்செக்ஸ்!

கடந்த வாரத்தில் சென்செக்ஸ், திடீரென 1,066 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது நினைவிருக்கலாம். இந்த பெரும் சரிவுக்குப் பிறகு மீண்டும் சென்செக்ஸ் ஏற்றம் காணுமா? என பலருக்கும் சந்தேகம் இருந்தது.

இன்று காலை 425 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,408 புள்ளிகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். சந்தேகமே வேண்டாம், பங்குச் சந்தை இன்னும் ஏற்ற டிரெண்டில் தான் இருக்கிறது எனக் காட்டி இருக்கிறது.

425 புள்ளிகள் ஏற்றம்! 40,408 புள்ளிகளில் மாஸ் காட்டும் சென்செக்ஸ்!

கடந்த வெள்ளிக் கிழமை (16 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,982 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,318 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,448 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 425 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,408 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

மும்பை பங்குச் சந்தை நிலவரம் என்ன?

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 07 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பி எஸ் இ-யில் மொத்தம் 1,979 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,257 பங்குகள் ஏற்றத்திலும், 629 பங்குகள் விலை இறக்கத்திலும், 93 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 58 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் ஓ என் ஜி சி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டைட்டன், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஐரோப்பிய சந்தைகள்

கடந்த வெள்ளிக்கிழமை (16 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.49 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.03 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.62 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

இன்று (19 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவானின் தைவான் வெயிடெட் 0.99 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+