40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ்! மகிழ்ச்சி வெள்ளத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று காலை பங்குச் சந்தை பற்றிய செய்தியிலேயே, பிப்ரவரி 2020-க்கு பிறகு, சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாவது இதுவே முதல் முறை எனச் சொல்லி இருந்தோம். அதே பிப்ரவரி 2020-க்குப் பிறகு, சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (07 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,878 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,204 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,468 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 303 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,182 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ்! மகிழ்ச்சி வெள்ளத்தில் முதலீட்டாளர்கள்!

மும்பை பங்குச் சந்தை நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 14 பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,847 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,239 பங்குகள் ஏற்றத்திலும், 1,441 பங்குகள் விலை இறக்கத்திலும், 167 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 150 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் அல்ட்ரா டெக் சிமெண்ட், டி சி எஸ், ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, ஐ டி சி, ரிலையன்ஸ், லார்சன் & டியூப்ரோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (08 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.51 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.49 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.66 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றாத்தில் வர்ட்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

இன்று (08 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், ஹாங் காங் நாட்டின் ஹேங் செங் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. தைவான் நாட்டின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் போன்ற சந்தைகள் 0.8 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+