ஏழு மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாவதை முன்பே சொல்லி இருந்தோம். கடந்த பிப்ரவரி 2020-ல் தான் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது, அதன் பிறகு, இன்று தான் 40,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் 41,000 புள்ளிகளைத் தொட்டாலும் தொடலாம் போலத் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (09 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,509 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,716 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,905 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது, நேற்றைய குளோசிங் புள்ளியை விட 265 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,775 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 12 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,482 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 913 பங்குகள் ஏற்றத்திலும், 1,382 பங்குகள் விலை இறக்கத்திலும், 187 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 93 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
டாப் 30 பங்குகள் ஏற்றம் இறக்கம்
ஐடிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஓ என் ஜி சி, டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்ட்லே போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (12 அக்டோபர் 2020) ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி, தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஹாங் காங் நாட்டின் ஹேங் செங் சந்தை 2.23 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
எந்த இண்டெக்ஸ் டாப்
இன்று வங்கி, எஃப் எம் சி ஜி, ஐடி, பார்மா போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஐடி மட்டும் 1.39 சதவிகிதம் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. மற்ற செக்டார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications