ஏற்றம் சிரமமே..! சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்ட் செல்வதென்ன..?

வெள்ளிக்கிழமை, குளோசிங் பெல் செய்தியிலேயே சர்வதேச அளவில் மேக்ரோ பொருளாதார செய்திகள் அத்தனை நன்றாக இல்லை எனச் சொல்லி இருந்தோம். அதோடு, இந்திய பங்குச் சந்தைகள், இந்தியப் பொருளாதாரம் குறித்த செய்திகளை, அத்தனை சிரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் சொல்லி இருந்தோம். அதோடு சந்தை ஃபண்டமெண்டல் செய்திகளை கண்டு கொள்ளாமல் ஏற்றம் கண்டு வருவதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னோம்.

நாம் சொன்னது போலவே, சில தினங்களுக்கு முன், இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனும் "இந்தியப் பொருளாதாரம் தரை தட்டிக் கொண்டிருக்கும் போது, இந்திய பங்குச் சந்தைகள் மட்டும் எப்படி மேலும் மேலும் புதிய ஏற்றங்களைக் காண்கின்றன. இந்த கேள்விக்கு யாராவது பதில் கண்டு பிடித்தால் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து என் சந்தேகத்தை போக்கிக் கொள்கிறேன்" எனச் சொல்லி இருக்கிறார்.

ஏற்றம் சிரமமே..! சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்ட் செல்வதென்ன..?

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸை, டெக்னிக்கலாகப் பார்க்கும் போது, கடந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு டோஜி உருவாகி இருக்கிறது. எனவே சென்செக்ஸ், மேற்கொண்டு ஏற்றம் காண்பது கொஞ்சம் சிரமமான விஷயமாகத் தெரிவதாகச் சொல்லி இருந்தோம். நாம் கணித்தது போலவே சென்செக்ஸ் புதிய உச்சங்கலைத் தொடாமல், இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு இறக்க டிரெண்டையும் உறுதி செய்து இருக்கிறது.

நாளை ஏதாவது நல்ல செய்தி வந்தால் சென்செக்ஸ் ஏற்றம் காணலாம். அப்படி ஒருவேளை சென்செக்ஸ் ஏற்றம் கண்டால் 41,750 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,950 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இன்று போல, இறக்கம் காணத் தொடங்கினால் 41,500-ஐ முதல் சப்போர்ட்டாகவும், 41,150-ஐ இரண்டாவது சப்போர்ட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,681 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,548 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,642 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் வெறும் 38 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,235 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,262 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,721 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,118 பங்குகள் ஏற்றத்திலும், 1,410 பங்குகள் இறக்கத்திலும், 193 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,721 பங்குகளில் 67 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 118 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஜி எண்டர்டெயின்மெண்ட், வேதாந்தா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், மாருதி சுசூகி, ஹிரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், நெஸ்ட்லே, கோல் இந்தியா, ரிலையன்ஸ், எஸ்பிஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+