கடந்த செப்டம்பர் 20, 2019 வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் ஒரே நாளில் வாண வேடிகை காட்டியது போல சுமார் 1,920 புள்ளிகள் அதிகரித்தது. அதற்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த குறைத்தது தான் காரணம் என நமக்கு நன்றகத் தெரியும்.
அதற்கு அடுத்த நாளில் கூட மீண்டும் இழுத்துப் பிடித்து சுமார் 1,100 புள்ளிகள் மீண்டும் ஏற்றம் கண்டது. சுருக்கமாக கார்பப்ரேட் வரி என்கிற ஒரு செய்தியை வைத்து சந்தை இரண்டு வர்த்தக நாளில் சுமாராக 8.3 சதவிகிதம் உயர்ந்தது. ஆனால் இப்போது இன்ஸ்டால்மெண்டில் இ எம் ஐ செலுத்துவது போல ஏறிய ஏற்றம் எல்லாம் சரிந்து கொண்டு இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 38,822 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 38,873 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலெயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான மிகக் குறைந்தபட்ச புள்ளியாக 38,465 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது இன்று வர்த்தகமாகத் தொடங்கிய விலையில் இருந்து 357 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 39 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,676 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 978 பங்குகள் ஏற்றத்திலும், 1,546 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,676 பங்குகளில் 59 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 137 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி தவிர அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. வங்கி, பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி, ரியாலிட்டி, மீடியா, போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் கீழே இறக்கிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட், ஆக்ஸிஸ் , ஐசிஐசிஐ போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாகி வருகின்றன. ஹெச் சி எல் டெக், யூபிஎல், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், பிபிசிஎல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications