மீண்டும் 39,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்! ஏற்றத்தில் பங்குச் சந்தைகள்!

நேற்று மாலை சென்செக்ஸ் 38,628 புள்ளிகளில் நிறைவடைந்து. இன்று காலை 38,754 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,037 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 38,542 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.

நேற்று ஜிடிபி தரவுகள் குறித்த நெகட்டிவ் செண்டிமெண்டால், சென்செக்ஸ் தன் உச்சப் புள்ளியான 40,010-ல் இருந்து, 1,382 புள்ளிகள் சரிந்து 38,628 புள்ளிகளில் நிறைவடைந்தது.

சரி, ஜூன் 2020 காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் 23.9 % சரிந்து இருக்கும் செய்தி வெளியாகிவிட்டது. இன்று சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்திலும், விலை இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்

என் டி பி சி, ஏஷியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஓ என் ஜி சி, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்ட்லே, சன் பார்மா, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,261 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 773 பங்குகள் ஏற்றத்திலும், 1,372 பங்குகள் விலை இறக்கத்திலும், 116 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 53 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (1 செப்டம்பர் 2020), ஆசியாவில், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், சீனாவின் ஷாங்காய் காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தென் கொரியாவின் கோஸ்பி 1.13 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இண்டெக்ஸ்

இண்டெக்ஸ்

இன்று, மீடியா, பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி தவிர மற்ற எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற எல்லா துறைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மெட்டல், ஆட்டோமொபைல், ஐடி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் ஓரளவுக்கு நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+