41,000 தொடுமா சென்செக்ஸ்..? 3-வது நாள் ஏற்றத்தில் சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று மாலை நுகர்வோர் பணவீக்கக் குறியீடுடான சிபிஐ மற்றும் இந்திய தொழில் துறை உற்பத்தியைப் பிரதிபலிக்கும் ஐஐபி தரவுகள் வெளியானது. சிபிஐ கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு, நவம்பர் 2019 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

கடந்த அக்டோபர் 2019 மாதத்துக்கான, இந்திய தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இவ்வளவு பலமான பொருளாதார செய்திகள் வந்தாலும் இன்று சந்தை சுமார் 350 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே தற்காலிகமாக சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் பாசிட்டிவாக இருப்பதாகவே தெரிகிறது.

41,000 தொடுமா சென்செக்ஸ்..? 3-வது நாள் ஏற்றத்தில் சந்தை..!

சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவானதால், 41,000 ஒரு வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே நவம்பர் 29க்கான சார்ட்டில் 41,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை. இந்த டிரெண்டை உடைக்கும் விதமாக, கடந்த டிசம்பர் 11, 2019 அன்று, ஒரு பாசிட்டிவ் ஹேங்கிங் மேன் உருவானது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்செக்ஸ் ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சந்தை இன்று ஏற்றம் கண்டு முடிந்தாலும், 41,000 புள்ளிகளைக் கடப்பது பெரிய விஷயம். எனவே 41,000 புள்ளிகளை வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

டெக்னிக்கலாக, சென்செக்ஸின் டே சார்ட்டில், எலியட் வேவ் தியரி படி பார்த்தால் இப்போது இறக்க டிரெண்டு முடிந்து ஒரு சிறிய ஏற்ற டிரெண்டில் இருக்கிறது. எனவே தற்போதைய சூழலில் சந்தை பழைய உச்சப் புள்ளியான 41,160-த் தாண்டி ஏற்றம் காண்பது சிரமமே என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,581 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,754 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,946 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி 365 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,026 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,066 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,108 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,317 பங்குகள் ஏற்றத்திலும், 657 பங்குகள் இறக்கத்திலும், 134 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. 2,108 பங்குகளில் 30 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 85 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.

டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, யெஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. டாக்டர் ரெட்டீ லேப்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex again trying to touch 41000 mark

The Bombay Stock Market benchmark index sensex 30 is trying to touch the 41,000 mark.
Story first published: Friday, December 13, 2019, 12:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X