சென்செக்ஸ் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்ட்டில் கடந்த 16 ஜனவரி 2020 மற்றும் 17 ஜனவரி 2020 ஆகிய தேதிகளில் டோஜி கேண்டில் உருவாகி இருந்தது. அதற்கு அடுத்த மூன்று நாட்கள் சென்செக்ஸ் மரண அடி வாங்கியது.
அந்த இறக்கத்துக்குப் பின், நேற்று (ஜனவரி 23, 2020) மீண்டும் சென்செக்ஸ் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது. அந்த ஏற்றம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,386 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,377 புள்ளிகளில் கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது. சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 41,663 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. தற்போது சுமாராக 41,655 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,174 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 12,260 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 5 பங்குகள் மட்டுமே இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,559 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,416 பங்குகள் ஏற்றத்திலும், 986 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,559 பங்குகளில் 84 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 78 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், பிரிட்டானியா, கோல் இந்தியா, லார்சன், என் டி பி சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் லிமிடெட், சிப்லா, விப்ரோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.28 ரூபாயாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.38 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications