ஜஸ்ட் மிஸ்! 30,932 புள்ளிகளில் சென்செக்ஸ்!

நாம் ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் சொல்லி இருப்பது போல சென்செக்ஸ், தன் கொரோனாவுக்குப் பிந்தைய உச்சமாக, 33,887 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.

ஆனால் அதற்குப் பின், மீண்டும் 33,887 புள்ளிகளைக் கடப்பது போன்ற சூழல் சென்செக்ஸில் உருவானதாகத் தெரியவில்லை.

ஆனால் இன்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் 30,932 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் 31,000-ஐ தொடவில்லை என்கிற வருத்தம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைய வர்த்தக நிலவரம் என்ன? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 30,818 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,765 புள்ளிகள் வரைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் 30,932 புள்ளிகளைத் தொட்டு 114 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இன்னும் ஒரு 68 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தால் 31,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டதாக மகிழ்ச்சி அடைந்து இருக்கலாம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,414 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,329 பங்குகள் ஏற்றத்திலும், 912 பங்குகள் இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

துறை சார் இண்டெக்ஸ்

துறை சார் இண்டெக்ஸ்

நிஃப்டியின் துறை சார் இண்டெக்ஸ்களில் வங்கி, நிதி சேவைகள், தனியார் வங்கி மற்றும் ரியாலிட்டி தவிர மற்ற எல்லா துறைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. குறிப்பாக ஆட்டோ மற்றும் எஃப் எம் சி ஜி துறை சார் இண்டெக்ஸ்களும் முறையே 2.6 % & 2.1 % ஏற்றத்தில் வர்த்தகமாயின

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று மே 21, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.64 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.93 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.34 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நேற்று எல்லாமே ஏற்றத்தில் நிறைவடைந்த போதிலும், இன்று மீண்டும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கம் கண்டு வருவது, இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

ஐ டி சி, ஹிண்டால்கோ, ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ் இண்ட் பேங்க், என் டி பி சி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

டாலர் & கச்சா எண்ணெய்

டாலர் & கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்னும் 75.5 ரூபாய்க்குக் கீழ் வரவில்லை. தற்போது 75.61 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 35 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+