39000-ல் நிறைவடைந்த சென்செக்ஸ்! குதூகளத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று மீண்டும் 39,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.

நேற்று மாலை, சென்செக்ஸ் 38,756 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 39,102 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 38,753 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ்.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 39,044 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமானது? எத்தனை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது?

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் விலை ஏற்றத்திலும், 09 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,912 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,580 பங்குகள் ஏற்றத்திலும், 1,166 பங்குகள் விலை இறக்கத்திலும், 166 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 165 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.
டைடன், மாருதி சுசூகி, ஐ டி சி, ஏஷியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

39000 - 40000 ஒரு மாய எண்

39000 - 40000 ஒரு மாய எண்

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் தான், சென்செக்ஸ் கொஞ்சமாவது 39,000 புள்ளிகளைக் கடந்து 40,000 புள்ளிகளை எட்டிப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. 36,701 புள்ளிகள் வரை சரிந்தது சென்செக்ஸ். அதன் பின் செப்டம்பரில் தான் சென்செக்ஸ் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. அதுவும் கார்ப்பரேட் வரி குறைப்பால் என்பது நினைவு கூறத்தக்கது. எனவே சரியான ட்ரிக்கர் வரும் வரும் சென்செக்ஸ் இந்த 39000-த்தை உடைப்பதே சிரமம் என அன்லிஸ்ட்கள் சொல்கிறார்கள்.

ஐரோப்பிய ஆசிய சந்தைகள்

ஐரோப்பிய ஆசிய சந்தைகள்

இன்று (15 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.85 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.38 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.28% ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி & இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் போன்ற சந்தைகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்றவைகள் எல்லா ஏற்றத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+