40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..! நீடிக்க வாய்ப்பு இருக்கிறதா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஜூன் 03, 2019 அன்று தான் முதல் முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்தது. அடுத்த நாளும் (ஜூன் 04, 2019) சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த ஜூன் 04, 2019 அன்றைய நாளுக்கான சென்செக்ஸ் சார்ட்டில் கிட்டதட்ட ஒரு இன்வெர்டட் ஹேமர் பேட்டன் உருவானது. அதன் பிறகு ஒரு முறை கூட சென்செக்ஸ் தன்னுடைய 40,000 புள்ளிகளைத் தொட முடியவில்லை.

இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் சென்செக்ஸ் மீண்டும் தன் 40,000 என்கிற உச்சத்தை எட்டிப் பிடித்து இருக்கிறது. ஆனால் இந்த முறையும் ஒரு சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..! நீடிக்க வாய்ப்பு இருக்கிறதா..?

 

இன்றைய நாளுக்கான சார்ட்டைப் பார்க்கும் போது, ஒரு டோஜி பேட்டன் உருவாகி இருக்கிறது. எனவே சந்தை நாளை டெக்னிக்கலாக ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவே. ஆனால் ஃபண்டமெண்டலாக நல்ல செய்திகள் வந்தால் சந்தை மேலே செல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஒரு வேளை சந்தை நாளையும் இந்த டிரெண்டைப் பின் பற்றி ஏற்றம் கண்டால், 40,000 புள்ளிகளில் நிலைத்து நிற்பது முதல் சவாலாக இருக்கும். காரணம் 40,000 லெவல்களை, இதுவரை சென்செக்ஸ் தன் வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே (இன்றோடு சேர்த்து) கடந்து நிறைவடைந்து இருக்கிறது. ஒருவேளை அதையும் மீறி நல்ல ஏற்றம் கண்டு, 40,000 புள்ளிகளில் நிலைத்துவிட்டால், அடுத்த ரெசிஸ்டென்ஸாக 40,300 இருக்கும். இதை உடைப்பது அத்தனை சுலபம் இல்லை.

சரி, ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 39,850 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதுவும் உடைபட்டால் 39,500 அடுத்த சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 39,831 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,055 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,051 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 220 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,643 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,844 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 57 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 22 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,672 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,384 பங்குகள் ஏற்றத்திலும், 1,119 பங்குகள் இறக்கத்திலும், 169 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,672 பங்குகளில் 82 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 136 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோ, மீடியா, மெட்டல், பார்மா, ரியாலிட்டி தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கிகள், எஃப் எம் சி ஜி, ஐடி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.

 

கெயில், எஸ்பிஐ, க்ராசிம், டிசிஎஸ், ஐடிசி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இண்ஃப்ராடெல், யெஸ் பேங்க், மாருதி சுசூகி, பிரிட்டானியா, யுபிஎல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex closed above 40000 after a long time

Sensex 30 index closed above 40,000 mark after a long time. But going further is bit tough as per chart patterns
Story first published: Wednesday, October 30, 2019, 17:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X