300 புள்ளிகள் சரிவு..! ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..!

நம் இந்திய நாட்டுக்கு, மூடீஸ் நிறுவனம் கொடுத்து இருந்த ஸ்டேபிள் தரத்தில் இருந்து நெகட்டிவ் தரத்துக்கு மாற்றி இருக்கிறது. இந்த ஒரு செய்தியே இன்று இந்திய சந்தைகளை படாத பாடாக படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்த தரக் குறைவுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து பேசியவர்களின் பேச்சுக்கு சந்தை பெரிதாக செவி சாய்க்கவில்லை. எனவே இத்தனை நாட்களாக நல்ல ஏற்றங்களை கண்டு வந்த சென்செக்ஸ் இன்று ஒரு பெரிய இறக்கத்தைச் சந்தித்து இருக்கிறது.

300 புள்ளிகள் சரிவு..! ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..!

ஒரு வேளை சந்தை நாளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,500 முதல் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். காரணம் இப்போது தான் சென்செக்ஸ் முதல் முறையாக 40,500-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த டிரெண்டு முடிந்ததைப் போலத் தான் தெரிகிறது. நேற்றைக்கான (நவம்பர் 07) கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு இன்றைய சந்தை வர்த்தகம் ஆகி இருக்கிறது. எனவே நாளை சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான்.

அப்படி ஒருவேளை, நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 39,850 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே போகாது என நம்புவோம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,653 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,630 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,323 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 330 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,987 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,908 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 103 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 24 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,697 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,040 பங்குகள் ஏற்றத்திலும், 1,482 பங்குகள் இறக்கத்திலும், 175 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,697 பங்குகளில் 75 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 109 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் வங்கி, தனியார் வங்கி, ரியாலிட்டி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பார்மா, பொதுத் துறை வங்கி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்த் இன்ஃப்ராடெல், சன் பார்மா, கெயில், யூபிஎல், வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+