5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..!

ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா போன்ற சென்செக்ஸ் 30-ன் அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் எல்லாமே ஏதோ கொஞ்சம் ஏற்றம் கண்டதால் இன்று சென்செக்ஸால் புதிய உச்சங்களைத் தொட முடியவில்லை. அதோடு சந்தையை அப்படியே மேலே எடுத்துச் செல்வதற்கான மேக்ரோ பொருளாதார செய்திகளோ அல்லது அரசு தரப்பு செய்திகளோ கூட இல்லை என்பதால் சென்செக்ஸ் கொஞ்சம் 40,250 புள்ளிகளிலேயெ நிலை கொண்டு வர்த்தகமாகி இருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தி ரூபாய் மதிப்பு 70.70 ரூபாய் என இறக்கத்தில் வர்த்தகமாகி வருவது, கொஞ்சம் ஆறுதலான விஷயம். அதே நேரத்தில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ண்ணெய் விலை சுமார் 62 டாலருக்கு வர்த்தகமாகி வருவது நம் சந்தைக்கு ஒரு குட்டி நெகட்டிவ் செய்தி தான்.

5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..!

ஒரு வேளை சந்தை நாளை ஏற்றம் கண்டால், நாம் நேற்று சொன்னது போல, 40,300 முதல் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். காரணம் இப்போது தான் சென்செக்ஸ் முதல் முறையாக 40,300-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதன் பிறகு 40,500-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை, நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு நல்ல சப்போர்ட்டாக இப்போது பார்க்க முடிகிறது. காரணம் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேல் சுமார் ஐந்து வர்த்தக நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 39,850 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,301 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,445 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,248 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 53 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,974 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,917 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 24 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,656 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,010 பங்குகள் ஏற்றத்திலும், 1,478 பங்குகள் இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,656 பங்குகளில் 59 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 100 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் எஃப் எம் சி ஜி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மீடியா, பார்மா போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.

யூபிஎல், யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், பஜாஜ் ஃபனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஈஷர் மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், க்ராசிம் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+