புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..! விரைவில் 40,500-ஐக் கடக்கலாம்..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தி ரூபாய் மதிப்பு 70.72 ரூபாய் என இறக்கத்தில் வர்த்தகமாகி வருவது, பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவ்வாக வந்து கொண்டு இருப்பது, குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதான் அபுகாருக்கு ஆதாரம் இல்லை என அவர்களே முன் வந்து சொன்னது, ஹெச் டி எஃப் சி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் காரணமாக பங்கு விலை அதிகரித்து இருப்பது என பல விஷயங்கள் பாசிட்டிவாக இருந்ததால் இன்று சென்செக்ஸும் நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஒரு வேளை சந்தை நாளையும் இந்த டிரெண்டைப் பின் பற்றி ஏற்றம் கண்டால் கூட, 40,300 முதல் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். காரணம் இப்போது தான் சென்செக்ஸ் முதல் முறையாக 40,300-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதன் பிறகு 40,500-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே சென்செக்ஸ் ஏற்றம் கண்டு 40,500 புள்ளிகளை தொடலாம் எனச் சொன்னதை இன்றே கிட்ட தட்ட 40,483 புள்ளிகளைத் தொட்டு நிரூபித்து இருக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..! விரைவில் 40,500-ஐக் கடக்கலாம்..!

ஒருவேளை, நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 39,850 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,165 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,293 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,301 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 136 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,928 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,941 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில்15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,755 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,431 பங்குகள் ஏற்றத்திலும், 1,151 பங்குகள் இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,755 பங்குகளில் 85 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 115 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோ, எஃப் எம் சி ஜி, மீடியா, தனியார் வங்கிகள், ரியாலிட்டி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல், நிதி சேவை போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.

பார்தி இன்ஃப்ராடெல், ஜெ எஸ் டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், இந்தியன் ஆயில், மாருதி சுசூகி, ஹிரோ மோட்டோகார்ப், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+