இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இன்னும் குறையலாம் என பொருளாதார வல்லுநர்கள் சொன்ன நெகட்டிவ் செய்திகள், சந்தையை கொஞ்சம் பாதித்து இருக்கிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம், சந்தை உச்சத்தில் இருக்கிறது. ஆனால் பொருளாதாரம் போராடிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் உஷாராக வர்த்தகங்களை மேற்கொள்ளவும்.
அதோடு சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமானதும் சென்செக்ஸ் ஏற்றத்துக்கு வழி வகுத்தது. அதோடு பங்கு சார்ந்த செய்திகளும் இன்று சந்தையை அதிகரிக்க உதவின. ஒரு வேளை சந்தை நாளையும் இந்த மொமெண்டத்தில், ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் 40,750 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 40,850-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டுமே இண்ட்ரா டே ஹை புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் 40,653 புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தால் தன் உச்ச புள்ள்யை மீண்டும் தொட்டதாக பார்த்து இருக்கலாம். ஆனால் இரண்டு புள்ளியில் மிஸ்ஸாகிவிட்டது.

கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்தது. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் நேற்று வரை சந்தை இறங்கிக் கொண்டு தான் இருந்தது.
ஆனால் இன்று சென்செக்ஸ் அந்த பேட்டனையே உடைக்கும் அளவுக்கு தன் முந்தைய உச்ச விலையான 40,749 புள்ளிகளைக் தொட்டு தான் இன்று வர்த்தகமாகவே தொடங்கியது. அதோடு 40,816 என புதிய உச்சத்தையும் தொட்டது. எனவே, ஏற்றத்துக்கான பேட்டன் மீண்டும் சென்செக்ஸ் சார்ட்டில் உருவாகி இருக்கிறது என காலை பங்குச் சந்தை செய்திகளிலேயே சொல்லி இருந்தோம்.
ஆனால் எதிர்பாராத விதமாக சென்செக்ஸ் தன் பழைய குளோசிங் புள்ளியான 40,653 புள்ளிகளைக் கடந்து இன்றைய வர்த்தகம் நிறைவடையவில்லை. எனவே 40,650 ஒரு டபுள் டாப்பாக உருவாகி இருக்கிறது. நாளையும் 40,650 புள்ளிகளில் நிலைத்து நிற்பதே கொஞ்சம் சிக்கலான விஷயமாகத் தான் இருக்கும். ஆனால் ஒருவேளை 40,650 புள்ளிகளை உடைத்துக் கொண்டு நாளை 40,650 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தால், சென்செக்ஸ் மேற்கொண்டு புதிய உச்சங்களைத் தொடும் எனச் சொல்லலாம்.
நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் முன்பே சொன்னது போல 40,500 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,125 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். என்ன தான் இறக்கம் கண்டாலும் 40,125-க்குக் கீழ் இறக்கம் காண்பது அத்தனை எளிதல்ல.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,469 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,729 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,651 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 181 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,004 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,999 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 59 புள்ளி ஏற்றம் கண்டு இருக்கிறது. சென்செக்ஸ் போல நிஃப்டி ஒரு புள்ளி அதிகரித்து இருந்தால் 12,000-த்தில் நிறைவு செய்து இருக்கலாம். நிஃப்டியும் ஒரு புள்ளியில் 12,000 தவறவிட்டு விட்டது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,757 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,204 ஏற்றத்திலும், 1,349 பங்குகள் இறக்கத்திலும், 204 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,757 பங்குகளில் 50 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 165 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், சன் பார்மா, பாரத் பெட்ரோலியம், ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், இந்தியன் ஆயில், ஈஷர் மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications