பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள் தான்.
அந்த அளவுக்கு எடுத்த உடன் சரிவு, நடுவில் தேக்கம், முடிவில் உயர்வு என சில வாரங்களில் நடக்க வேண்டிய வர்த்தகம், ஒரே நாளில் நடந்து முடிந்து இருக்கிறது
இதற்கு மத்தியில் இந்திய சந்தைகள் சுமாராக 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது வேறு தனியாக குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் இன்று
நேற்று மாலை 32,778 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது சென்செக்ஸ், இன்று காலை சுமாராக 31,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி சில நிமிடங்களிலேயே 29, 388 புள்ளிகளைத் தொட்டது. இது சுமாராக 10 % சரிவு, எண்களில் பார்த்தால் 3,390 புள்ளிகள் சரிவு கண்டது.
45 நிமிடம்
இந்தியாவில் பொதுவாக, பங்குச் சந்தை இண்டெக்ஸ்கள் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்தாலோ அல்லது உயர்ந்தாலோ அப்போது ஒட்டு மொத்த சந்தையையும் வர்த்தகம் நடை பெறாமல் நிறுத்துவார்கள். அதைத் தான் சர்க்யூட் ஃபில்டர் என்பார்கள். இன்று இந்திய பங்குச் சந்தைகளிலும் அது தான் நடந்து இருக்கிறது.
2008
சுமாராக 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் டவுன் சர்க்யூட் ஃபில்டர் வந்தது இதுவே முதல் முறையாம். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவையே பங்குச் சந்தை செய்திகள் அலற விட்டுக் கொண்டு இருக்கிறது. 45 நிமிடங்களுக்குப் பிறகு, சுமார் 10.20 மணிக்கு மீண்டும் இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கின.
ஏற்றம்
முதலில் மூன்று அடி வாங்கிக் கொண்டு, நான்காவது அடியை வில்லன் அடிக்க வரும் போது, வளைத்து வளைத்து அடிக்கும் எம்ஜிஆரைப் போல, இன்று சென்செக்ஸ் தொடக்கத்தில் சரிந்தது. ஆனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் சுமாராக 1,325 புள்ளிகள் ஏற்றத்தில், 34,103 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
30 பங்குகள் விவரம்
வழக்கமான நாட்களைப் போல, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 25 பங்குகள் விலை ஏற்றத்திலும், 04 பங்குகள் மட்டுமே விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. இதில் எஸ் பி ஐ 13.87 %, டாடா ஸ்டீல் 13.48 % லாபம் பார்த்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,548 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,247 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,140 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. 161 பங்குகள் விலை மாற்றமின்றி வர்த்தகமாயின. 13 பங்குகள் தன் புதிய 52 வார உச்ச விலையையும், 1,340 பங்குகள் தன் 52 வார குறைந்த விலையையும் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகள்
இன்று மார்ச் 13, லண்டனின் எஃப் டி எஸ் இ 4.90 % உயர்வு, பிரான்ஸின் சி ஏ சி 4.62 % உயர்வு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.98 % உயர்வு என ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே கொஞ்சம் தேறி ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அவர்களைத் தொடர்ந்து ஆசிய சந்தைகளும் ஒரு கணிசமான ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஆசிய சந்தைகள்
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 5.27 % ஏற்றம்
தாய்லாந்தின் எஸ் இ டி காம்போஸைட் 1.26 % ஏற்றம்
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.24 % ஏற்றம் கண்டு இருக்கின்றன.
ஜப்பானின் நிக்கி 6.08 % % சரிவு
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 1.67 % சரிவு
ஹாங்காங்கின் ஹேங்செங் 1.14 % சரிவு
தைவானின் தைவான் வெயிடெட் 2.82 % சரிவு
தென் கொரியாவின் கோஸ்பி 3.43 % சரிவு
சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 1.23 % சரிவு என சில சந்ந்தைகள் பெரிய சரிவில் தான் வர்த்தகமாயின.
உலக காரணிகள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 73.85 -ஐத் தொட்டு வர்த்தகமாகிறது. அதே போல, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 36.76 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒருவழியாக சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது பலருக்கும் ஒரு நிம்மதியைக் கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications