39,086-ல் நிறைவடைந்த சென்செக்ஸ்! மீண்டும் ஏற்றப் பாதையில் சந்தை!

நேற்று 272 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 38,900 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது சென்செக்ஸ்.

இன்று காலை 38,892 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,141 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 39,086 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

நேற்றைய குளோசிங் புள்ளியை விட 185 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் பங்குகளின் விலை நிலவரம் என்ன? உலக சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை ஏற்றத்திலும், 12 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,825 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,628 பங்குகள் ஏற்றத்திலும், 1,051 பங்குகள் விலை இறக்கத்திலும், 146 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 90 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்


மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பஜாஜ் ஆட்டோ, ஏஷியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, ஹெச் டி எஃப் சி, நெஸ்ட்லே இந்தியா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஆசிய பங்குச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (02 செப்டம்பர் 2020), ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங்கின் ஹேங்செங், தைவானின் தைவான் வெயிடெட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், ஏற்றத்தில் வர்த்தகமாயின. தென் கொரியாவின் கோஸ்பி 0.79 % ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (02 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.55 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.21 % எற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.23 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+