நேற்று, சென்செக்ஸ், நாம் சொன்ன 41,775 புள்ளிகளை விட படு பயங்கரமாக சரிந்து 41,528 புள்ளியில் நிறைவடைந்தது சென்செக்ஸ். நேற்றைய உச்சப் புள்ளியைக் கணக்கிட்டால் அது 42,273 புள்ளிகள். ஆக 42,273 புள்ளியில் இருந்து இன்று 41,323 புள்ளிகளைத் தொட்டு சென்சென்ஸ் இன்றைக்கான வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 2 நாளில், உச்ச புள்ளியில் இருந்து 950 புள்ளிகள் சரிவு.
இதே நிலை தொடர்ந்தால், சென்செக்ஸ் தன் 41,000 புள்ளிகள் என்கிற வலுவான சப்போர்ட்டைக் கூட பறி கொடுக்க வேண்டிய நிலை வரலாம். எனவே வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் ஜாக்கிரதையாக வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,528 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,487 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 41, 301 புள்ளிகளைத் தொட்டது. இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 41,323 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,195 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,169 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,674 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,107 பங்குகள் ஏற்றத்திலும், 1,396 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,674 பங்குகளில் 66 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 77 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின் மெண்ட், பி பி சி எல், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா லிமிடெட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐ ஓ சி, ஏஷியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.23 ரூபாயாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 64.31 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications