கடந்த ஐந்து வர்த்தக நாட்களாகவே சென்செக்ஸ் தன் 41,750 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக, சென்செக்ஸ் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் 41,932 மற்றும் 41,945 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

ஆக சென்செக்ஸ் மேற்கொண்டு 42,000 புள்ளிகளைக் கடந்து செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதோடு, கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் 42,000 புள்ளிகளை தன் இண்ட்ரா டே வர்த்தகத்தில் தொட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,932 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,929 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,063 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள், சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 41,945 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,328 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,352 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,715 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,325 பங்குகள் ஏற்றத்திலும், 1,219 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,715 பங்குகளில் 95 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 67 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ரிலையன்ஸ், க்ராசிம், சன் பார்மா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இண்ட்ராடெல், இண்டஸ் இண்ட் பேங்க், கெயில், யெஸ் பேங்க், பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
அமெரிக்க ஈரான் பிரச்சனை ஓரளவுக்கு சுமூகமாக முடிந்து இருப்பதால், ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 64.84 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.08 ரூபாய்க்கு வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications