கடந்த மார்ச் 24, 2020 அன்று சென்செக்ஸ் சுமார் 690 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது. நேற்று கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 1,860 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்செக்ஸ் சுமாராக 1,410 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நீண்ட நாட்கள் கழித்து சென்செக்ஸ் தொடர்ந்து ஏற்றம் காண்பது போல ஒரு உணர்வு இருக்கிறது. சரி சென்செக்ஸ் நிலவரம் என்ன..?
சென்செக்ஸ்
நேற்று மாலை, 28,535 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 29,073 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 30,099 புள்ளிகளைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 29,946 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியான 29,946 புள்ளிகளை கணக்கிட்டால் சுமார் 1,410 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
பங்குகள் நிலை
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,449 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,508 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 770 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் உலக சந்தை
இன்று மார்ச் 26, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ 2.15 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிரான்சின் சி ஏ சி 1.82 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.36 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று மார்ச் 25, 2020, ஆசியாவின் பெரும்பாலான சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 4.51 % சரிந்து இருக்கிறது. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 10.19 % ஏற்றத்தில் வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
டாலர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு வழியாக 76 ரூபாய்க்குக் கீழ் வந்து இருக்கிறது. ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய்க்கு மேலேயே இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. 75-க்கு கீழ் வந்தால் நன்றாக இருக்கும்.
பங்குகள்
இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல், லார்சன், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், கெயில், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications