ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் இன்னமும் சீரான நிலையை அடையாமல் இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் காலாண்டுகளான ஜிடிபி தகவல்கள் வியாழக்கிழமை மத்திய அரசு வெளியிடுகிறது.
இதனை முன்கூட்டியே சுதாரித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயரும் இந்த தருவாயில் ரிஸ்க் எடுக்க முடியாமல் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தையே பதிவு செய்தது.
நேற்றைய உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் இன்று துவங்கிய பின் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான சரிவுக்கு கொண்டு சென்றது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 105.85 புள்ளிகள் வரையில் சரிந்து 33,618.59 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 29.30 புள்ளிகள் சரிந்து 10,370.25 புள்ளிகளையும் அடைந்தது.


Click it and Unblock the Notifications