மும்பை: வர்த்தகப் போரினை தடுக்க அமெரிக்க மற்றும் சீன இடையிலான பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் செய்திகளாக வெளியானதை அடுத்து உள்நாட்டுச் சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 469.87 புள்ளிகள் என 1.44 சதவீதம் உயர்ந்து 33,0664.41 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 132.60 புள்ளிகள் என 1.33 சதவீதம் உயர்ந்து மீண்டு 10,000 புள்ளிகளைக் கடந்து 10,130.65 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
வங்கி துறை பங்குகள்
பொதுத் துறை வங்கிகளைப் பொருத்தவரையில் கனரா வங்கி 10.5 சதவீதமும், பாங்க் ஆ பரோடா 6.2 சதவீதமும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா 5 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளன.
நிதி சேவைகள்
நிதி சேவைகள் அளிக்கும் நிறுவனங்களில் எல்ஐசி ஹவுசிங் ஃபினான்ஸ் பங்குகள் உயர்ந்தன. எச்டிஎப்சி பங்குகள் 2.3 சதவீதமும், பஜாஜ் ஹோல்டின்ங்ஸ் நிறுவனப் பங்குகள் 3.3 சதவீதமும் உயர்ந்தன.
மெட்டல் நிறுவனங்கள்
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபள்யூ, ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வேதாந்தா நிறுவனப் பங்குகள் 2 முதல் 4 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன.
சென்ற வாரம்
சென்ற வாரம் இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 579 புள்ளிகளும், நிப்டி 197 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
விடுமுறை
இந்த வாரத்தில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு வியாழக்கிழமை மற்றும் பங்கு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications