அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் ராணுவ தளபதியான கசிம் சுலைமானியை கொன்ற செய்தி எல்லோருக்கும் தெரியும். அதோடு ஈரான் உலக அளவில் எண்ணெய் வளமிக்க நாடுகளில் மிக முக்கியமான ஒன்று என்பதையும் நாம் அறிவோம்.
இந்த கொலைக்குப் பின் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு வரை சுமாராக 66 டாலருக்கு விற்று வந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது சுமாராக 70 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

உலக அளவில், கிட்டத்தட்ட ஒரு பொருளாதார சுனாமியையே கிளப்பி விட்டு இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். இதனால் ஏற்கனவே அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை இன்னும் விலை அதிகரிக்கலாம். இந்த பொருளாதார அதிவுகளுக்குத் தான், இந்திய சந்தைகள் இன்று சுமார் 600 புள்ளிகள் சரிந்து தரை தட்டிக் கொண்டு இருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 41,464 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,378 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 40,840 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,170 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 12,034 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,319 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 509 ஏற்றத்திலும், 1,679 பங்குகள் இறக்கத்திலும், 131 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,319 பங்குகளில் 36 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 66 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
டைடன் கம்பெனி, விப்ரோ, டி சி எஸ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, எஸ்பிஐ, ஜீ எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications