சென்செக்ஸ் இண்டெக்ஸ் கடந்த சில வர்த்தக நாட்களாக, மேல் நோக்கி வர்த்தகமானது. தினமும் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆனால் இன்று, சென்செக்ஸ் திடீரென யூடேர்ன் எடுத்து, (1,066 புள்ளிகள்) முரட்டு சரிவில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில், அதிகபட்சமாக 41,048 புள்ளியைத் தொட்டது. இந்த உச்சப் புள்ளியில் இருந்து 1,320 புள்ளிகள் சரிந்து 39,728 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் வர்த்தகம்
நேற்றைய குளோசிங் புள்ளியான 40,794 புள்ளியில் இருந்து 1,066 புள்ளிகள் சரிந்து, 39,728 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த சரிவினால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு என்ன? எவ்வளவு சந்தை மதிப்பை இழந்து இருக்கிறார்கள்? என்பதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
BSE-ல் ரூ 3.25 லட்சம் கோடி சந்தை மதிப்பு
நேற்று (14 அக் 2020, புதன்கிழமை) வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 160.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று (15 அக் 2020) வர்த்தக நேரம் நிறைவடைந்த பின், அதே மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 157.31 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆக ஒரே நாளில் 3.25 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
1,066 புள்ளிகள் சென்செக்ஸ் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?
1. ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி.
2. கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வேசின் மருந்துவ சோதனைகளில் ஏற்பட்டு இருக்கும் தடைகள்.
3. முதலீடுகளை விற்று வெளியேறும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்.
4. செம அடி வாங்கிய வங்கிப் பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்... போன்றவைகள் தான் சென்செக்ஸ் சரிவுக்கு முக்கிய காரணங்கள்.
மும்பை பங்குச் சந்தை நிலவரம் என்ன?
சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரு பங்கு மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமானது. மீதமுள்ள 29 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,790 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 816 பங்குகள் ஏற்றத்திலும், 1,823 பங்குகள் விலை இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 97 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications