18 செப்டம்பர் 2020 அன்று 38,845 புள்ளிகளுக்கு நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 38,812 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 38,990 புள்ளிகளைத் தொட்டது.
ஆனால் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 38,034 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக இன்றைய உச்சப் புள்ளியான 38,990 புள்ளிகளில் இருந்து 956 புள்ளிகள் சரிந்து 38,034 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
உச்சத்தில் இருந்து, 956 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவுக்கான முக்கிய காரணங்கள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
1. உலக பங்குச் சந்தைகள் சரிவு
ஆசியாவில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர, இன்று, எல்லா முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. ஹாங்காங் நாட்டின் ஹேங் செங், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் போன்ற சந்தைகள், அதிக இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
இன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 3.27 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 3.19 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.25 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
2. கொரோனா வைரஸ்
உலக அளவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,961 புதிய கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன. 1,130 பேர் மரணித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டும் 55 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நெகட்டிவ் செய்தி, சந்தையில் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறது. எனவே சட்டென சரிந்து விட்டது சென்செக்ஸ்.
3. வங்கி & நிதித் துறை பங்குகள் சரிவு
2010 முதல் 2017 வரையான கால கட்டங்களில், அமெரிக்க அரசு பணச் சலவை, போதைப் பொருள் டீலிங் போன்ற பணப் பரிமாற்றங்களாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு எச்சரித்த, பல பணப் பரிமாற்றங்களுக்கு, உதவி (Facilitate) செய்து கொடுத்து இருக்கிறது பல இந்திய வங்கிகள். இந்த செய்தி தற்போது வெளியானதால், பல வங்கி மற்றும் நிதித் துறை பங்குகள் விலை வீழ்ச்சி கண்டு இருக்கின்றன. எனவே சென்செக்ஸ் இண்டெக்ஸும் செம அடி வாங்கி இருப்பதாகச் சொல்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட்.
4. F&O காலாவதி
24 செப்டம்பர் 2020 உடன், செப்டம்பர் மாத காண்டிராக்ட்கள் எல்லாம் காலவதி ஆக இருக்கின்றன. எனவே பங்குச் சந்தைகளில் ஒரு கலக்கம் இருக்கிறது. முதலீட்டாளர்கள், தங்கள் ஹோல்டிங்ஸ்களை விற்று லாபம் பார்த்துவிட்டார்கள். மார்ச் சரிவில் இருந்து, சென்செக்ஸ் சுமாராக 50 சதவிகிதம் ஏற்றம் கண்டு இருக்கிறது. எனவே ஒரு கரெக்ஷன் இருக்கலாம் என்கிறார் இண்டி டிரேட் கேப்பிட்டல் தலைவர் சுதீப்.
5. மிட் & ஸ்மால் கேப்
S&P BSE மிட் கேப் மற்றும் S&P BSE ஸ்மால் கேப் இண்டெக்ஸ், இன்று சுமாராக 3.5 சதவிகிதம் சரிந்து இருக்கின்றன. இப்போது மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்து இருந்தவர்கள், தங்கள் பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். இந்த sell-off காரணமாக சென்செக்ஸ் இண்டெக்ஸும் வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications