இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி..!! ரூ.6 லட்சம் கோடியை இழந்து முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 6 லட்சம் கோடி ரூபாய் வரை இழந்து நஷ்டமடைந்தனர். பங்குச்சந்தையின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 73,000 புள்ளிகளுக்குக் கீழே சென்றது, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1% க்கும் அதிகமாக சரிந்து 23,000 புள்ளிகளுக்கு கீழே வீழ்ச்சியடைந்தது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சரிவிலேயே இருப்பதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி..!! ரூ.6 லட்சம் கோடியை இழந்து முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 106 டாலரை நெருங்கி உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 8% வரை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, பணவீக்கத்தை உயர்த்தும் மற்றும் நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கும் என்பதால் இந்திய பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுகின்றன.

அமெரிக்கப் பத்திரங்கள்: பங்குசந்தைகளை கவலைக்குள்ளாக்கும் மற்றொரு முக்கிய விஷயம் அமெரிக்காவின் கடன் பத்திர சந்தையாகும். அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் ஈவுத்தொகை 5.2% என உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் ஆபத்தான பங்குசந்தைகளில் முதலீடு செய்வதை காட்டிலும், அமெரிக்க அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதை லாபகரமானதாக கருதுகின்றனர். இதனாலும் பங்குச்சந்தைகள் சரிகின்றன.

Also Read

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்ள்: ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் பங்குகளை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் பங்குகளை விற்கின்றனர். இதனால் பங்குகள் சரிவை சந்திக்கின்றன.

Recommended For You

நிஃப்டியின் அனைத்துத் துறை குறியீடுகளுமே சிவப்பு நிறத்தில் தான் வர்த்தகமாகின. ஆட்டோமொபைல் , நிதிச் சேவைகள் ,உலோகங்கள் , ரியல் எஸ்டேட் மற்றும் எஃப்.எம்.சி.ஜி போன்ற துறைகள் 1% முதல் 2% வரை சரிந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் தலா 1.71% வரை சரிந்தன. ஹெச்.யு.எல் பங்கு 1.65% சரிந்தது, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு1.54% சரிந்தது, பஜாஜ் ஃபின்சர்வ் பங்கு1.53% சரிவை சந்தித்தது.

ஈரான் போர் தணிந்து கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலர் மதிப்பும் குறைந்தால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தைகளை நோக்கி வருவார்கள். அதே போல இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தமும் பங்குச்சந்தைக்கு பூஸ்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றத்தை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+